ஆப்நகரம்

சென்னையில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு- வானிலை மையம் தகவல்!

சென்னையில் மாலை அல்லது இரவு நேரங்களில் நகரின் ஒரு சில பகுதிகளில் மழையோ, இடியுடன் கூடிய மழையோ பெய்ய வாய்ப்பு உள்ளது.

Samayam Tamil 31 Aug 2019, 3:30 pm
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று மாலை இடியுடன் கூடிய கனமழை பெய்தது. குறிப்பாக அமைஞ்சிக்கரை, சூளைமேடு, வடபழனி, தரமணி, ஷெனாய் நகர், அண்ணா நகர், கோடம்பாக்கம், தி.நகர், கிண்டி, மயிலாப்பூர், ஆதம்பாக்கம், நங்கநல்லூர் பகுதிகளில் சுமார் ஒருமணி நேரத்துக்கும் மேலாக கனமழை கொட்டித் தீர்த்தது
Samayam Tamil சென்னையில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு- வானிலை மையம் தகவல்!
சென்னையில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு- வானிலை மையம் தகவல்!


இதனிடையே சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் இன்று கூறியிருப்பதாவது;

தெற்கு ஆந்திர கடற்கரை மற்றும் அதையொட்டிய பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சூழற்சி நிலவுகிறது. இதனாலும் வெப்பச்சலனம் மற்றும் தென்மேற்கு பருவக்காற்று காரணமாகவும் தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 24 மணி நேரத்துக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளது.

இப்படியே போராடினால் எப்படி பொருளாதாரம் வளரும்.? - தமிழிசை கொந்தளிப்பு..

குறிப்பாக, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், புதுக்கோட்டை, நீலகிரி, தேனி, திருநெல்வேலி, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், ராமநாதபுரம், கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

சென்னையை பொறுத்தவரை, வானம் மேகமூட்டத்துடன் காணப்படும், மாலை அல்லது இரவு நேரங்களில் நகரின் ஒரு சில பகுதிகளில் மழையோ, இடியுடன் கூடிய மழையோ பெய்ய வாய்ப்பு உள்ளது.

வங்கிகள் இணைப்பில் லாஜிக் இல்லை: வங்கி ஊழியர்கள் கருத்து

மேலும் சென்னையில் அதிகபட்ச வெப்பநிலையாக 37 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்சமாக 29 டிகிரி செல்சியஸ் பதிவாகும்.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக தமிழகத்தில் அதிகபட்சமாக பூந்தமல்லி, அண்ணா பல்கலைக்கழகம் பகுதிகளில் தலா 5 செ.மீ. மழை, நுங்கம்பாக்கம், சோழவரம், தாமரைபாக்கம், திருவள்ளூர் ஆகிய இடங்களில் தலா 3 செ.மீ. மழை பதிவாகி உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி தெரிவித்தார்.

லண்டனில் எடப்பாடியாரை பாதுகாக்கும் ஜெயலலிதா பாதுகாவலர்!!

அடுத்த செய்தி