ஆப்நகரம்

மழை இன்னும் எத்தனை நாளைக்கு தெரியுமா?

இரண்டு மாதங்களுக்கு முன் தாகத்தால் தண்ணீர் தேடி குடங்களுடன் தேடுதல் பயணம் மேற்கொண்ட தமிழகமா இது என்று ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது தற்போதைய வானிலை. ஜில்லென்று மாறிய இந்த வானிலை வரும் நாள்களிலும் தொடரவுள்ளது.

Samayam Tamil 20 Sep 2019, 4:30 pm
தமிழகத்தில் அடுத்த மூன்று நாட்களுக்கு மழையின் தீவிரம் இருக்கும் என சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தெற்கு தீபகற்ப பகுதியில் நிலவி வரும் வளிமண்டல மேல் அடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் பல இடங்களில் அடுத்த மூன்று நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil Untitled collage (5)


உள் தமிழகம் மற்றும் கடலோர தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யும். திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகை,
புதுக்கோட்டை, சிவகங்கை என 12 மாவட்டங்களில் அடுத்த மூன்று நாட்களுக்கு கன மழை பெய்வதற்கான வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக புதுக்கோட்டை மாவட்டம் உடையாள்பட்டியில் 7 செ.மீ மழையும், தஞ்சை நகர்ப் பகுதிகளில் 6 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது. புதுக்கோட்டை கந்தர்வக்கோட்டை, திருமயம், தஞ்சை மாவட்டம் வல்லம், பட்டுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டம் கமுதி, சிவகங்கை நகர் பகுதி, சிவகங்கை மாவட்டம் காரைக்குடி, திருவாரூர் வலங்கைமான்,
நாகை மாவட்டம் மயிலாடுதுறை உள்ளிட்ட இடங்களில் 5 செ.மீ மழை பதிவாகியுள்ளது. கீரனூர், சோழவரம், பெருங்கலூர், கும்பகோணம் ஆகிய பகுதிகளில் 4 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் இருக்கும், நகரின் சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழைபெய்யக்கூடும். வெப்பநிலை அதிகபட்சமாக 33 டிகிரி செல்சியஸும், குறைந்தபட்சமாக 25 டிகிரி செல்சியஸும் வரை பதிவாகும்.

அடுத்த செய்தி