ஆப்நகரம்

மீத்தேன் திட்டத்துக்கு மீண்டும் அனுமதி: சுற்றுச்சூழ நிபுணர் குழு

தமிழகத்தில் காவிரி ஆற்றுப்படுகையில் மீத்தேன் வாயு எடுக்கும் திட்டத்திற்கு மத்திய அரசின் சுற்றுச்சூழல் நிபுணர் குழு மீண்டும் அனுமதி வழங்கியுள்ளது.

TNN 23 Mar 2017, 6:01 pm
தமிழகத்தில் காவிரி ஆற்றுப்படுகையில் மீத்தேன் வாயு எடுக்கும் திட்டத்திற்கு மத்திய அரசின் சுற்றுச்சூழல் நிபுணர் குழு மீண்டும் அனுமதி வழங்கியுள்ளது.
Samayam Tamil methane project in cauvery delta districts approved again
மீத்தேன் திட்டத்துக்கு மீண்டும் அனுமதி: சுற்றுச்சூழ நிபுணர் குழு

தமிழகத்தின் தஞ்சாவூர் மாவட்டத்தில் மன்னார்குடி – திருவிடைமருதூர் இடையே உள்ள காவிரி ஆற்றுப்படுகையில் மீத்தேன் எடுக்கும் திட்டத்திற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து மத்திய அரசு இத்திட்டத்தை கைவிடுவதாக அறிவித்திருந்தது.

இந்நிலையில், இத்திட்டத்தின் திருத்தப்பட்ட வடிவத்தை மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் சிறப்பு சுற்றுச்சூழல் நிபுணர் குழு அளித்தது. இதனை சுற்றுச்சூழல் அமைச்சகர் இன்று ஏற்றுள்ளது.

நிபுணர் குழுவின் திருத்தப்பட்ட படிவத்தில் காவிரி ஆற்றுப்படுகையில் மீத்தேன் வாயு எடுக்கும் திட்டத்தை சில மாற்றங்களுடன் நடைமுறைப்படுத்த அனுமதிக்கலாம் என்று கூறப்பட்டிருக்கிறது. இதனால், மீண்டும் தமிழகத்தில் மீத்தேன் திட்டம் செயல்படுத்தப்பட வாய்ப்பிருப்பதாக கருதப்படுகிறது.

அடுத்த செய்தி