ஆப்நகரம்

மெட்ரோ ரயில் பணிகளால் வெளியேறும் ரசாயன கலவை

சென்னை பழைய வண்ணாரப்பேட்டை பகுதியில் மெட்ரோ ரயில் திட்ட பணிகள் நடைப்பெற்று வருவதால் பூமிக்கு அடியில் இருந்து அவ்வப்போது அடியில் இருந்து ரசாயன கலவைகளும், சிமென்ட் கலவைகளும் வெளியேறி வருகிறது.

TNN 20 Apr 2017, 8:41 pm
சென்னை : சென்னை பழைய வண்ணாரப்பேட்டை பகுதியில் மெட்ரோ ரயில் திட்ட பணிகள் நடைப்பெற்று வருவதால் பூமிக்கு அடியில் இருந்து அவ்வப்போது அடியில் இருந்து ரசாயன கலவைகளும், சிமென்ட் கலவைகளும் வெளியேறி வருகிறது.
Samayam Tamil metro rail work chamical leaked from earth
மெட்ரோ ரயில் பணிகளால் வெளியேறும் ரசாயன கலவை


சென்னை பழைய வண்ணாரப்பேட்டை கிழக்கு முத்தையா தெருவில் மெட்ரோ திட்ட பணிகள் நடந்து வருகிறது. இதனால் இப்பகுதியில் அடிக்கடி பூமிக்கு அடியில் இருந்து ரசாயன கலவைகளும், சிமென்ட் கலவைகளும் வெளியேறி வருகிறது.

இந்நிலையில் இன்று மீண்டும் பூமிக்கு அடியில் இருந்து ரசாயன கலவை வெளியேறி உள்ளது. மெட்ரோ பணியால் சென்னையில் அங்காங்கே திடீர் பள்ளங்கள் ஏற்பட்டு வரும் நிலையில், தற்போது ரசாயன கலவைகளும் வெளியேறி வருவதால் மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.

இதுகுறித்து மெட்ரோ நிர்வாகம் கூறும்போது, " சென்னை வண்ணாரப்பேட்டையில் நிலத்தில் இருந்து வெளியேறுவது சோப்பு நுரையுடன் கூடிய மண் தான் மண்ணை அகற்றும் பணி நடைபெற்றுவருகிறது, இதனால் மக்கள் அச்சப்பட தேவையில்லை . சென்னை வண்ணாரப்பேட்டையில் தென்படாத ஆழ்துளை கிணறுகளால் தான் மண் வெளியேறியது என்று மெட்ரோ நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

metro rail work : chamical leaked from earth

அடுத்த செய்தி