ஆப்நகரம்

இன்று தூர்வாரப்படும் மேட்டூர் அணை; பருவமழைக்கு முன்னேற்பாடு!

பருவமழைக்கு முன்னேற்பாடாக மேட்டூர் அணை இன்று தூர்வாரப்படுகிறது.

TNN 28 May 2017, 10:18 am
சேலம்: பருவமழைக்கு முன்னேற்பாடாக மேட்டூர் அணை இன்று தூர்வாரப்படுகிறது.
Samayam Tamil mettur dam desilting will begin today
இன்று தூர்வாரப்படும் மேட்டூர் அணை; பருவமழைக்கு முன்னேற்பாடு!


சேலம் மாவட்டம் மேட்டூரில் ஸ்டேன்லி நீர்த்தேக்கம் அமைந்துள்ளது. இது கடந்த 1934ஆம் ஆண்டு கட்டப்பட்டது. அதன் மூலம் 16.05 லட்சம் ஏக்கர் பாசன வசதி பெறுகிறது. அணை கட்டப்பட்டு 83 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், பல ஆண்டுகளுக்கு பிறகு இன்று தூர்வார ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வெள்ளம் மற்றும் மழைக் காரணமாக 20 % அளவிற்கு தூர் படிந்துள்ளதாக கூறப்படுகிறது. அதனால் முழு கொள்ளளவும் தண்ணீர் சேமிக்க முடியவில்லை. தமிழகத்தில் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வரும் சூழலில், எதிர்வரும் தென் மேற்கு பருவ மழையை சேகரிப்பது அத்தியாவசியமாகிறது.

இந்நிலையில் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழைப் பொழிவு நின்று விட்டதால், அணைக்கு நீர்வரத்து குறையத் தொடங்கியுள்ளது. அணை நீர்மட்டம் தற்போது 20 அடியாக உள்ளது. அதனால் மேட்டூர் அணையை இன்று தூர்வார முதலமைச்சர் பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார். அதன்மூலம் கூடுதல் நீர் சேகரித்து, குடிநீர் தேவையை ஓரளவு போக்க வழிவகை செய்ய முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Mettur Dam desilting will begin today.

அடுத்த செய்தி