ஆப்நகரம்

Cauvery Water: இந்த மாசத்துல இது ரெண்டாவது தடவை: மீண்டும் நிறைந்த மேட்டூர் அணை!

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்துவரும் கனமழை காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து அதிகரித்து அணை இந்த மாதம் இரண்டாவது முறையாக முழு கொள்ளளவை எட்டியுள்ளது.

Samayam Tamil 25 Sep 2019, 9:43 am
மேட்டூர் அணை செப்டம்பர் 7ஆம் தேதி முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது. பின் மழையின் அளவு குறைந்ததால் அணையின் நீர்மட்டம் 119.94 அடியாக குறைந்தது.
Samayam Tamil Untitled collage (18)


தற்போது கர்னாடகாவில் பெய்துவரும் கனமழையால் கபிணி, கேஎஸ்ஆர் அணைகளிலிருந்து அதிகளவு தண்ணீர் காவிரி ஆற்றில் வெளியேற்றப்படுகிறது. இதனால் மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து கணிசமாக உயர்ந்தது. அதைத் தொடர்ந்து இன்று அணையின் நீர் மட்டும் முழு கொள்ளளவை எட்டியது. அணைக்கு வரும் நீரின் அளவு 30 ஆயிரம் கன அடியிலிருந்து 40 ஆயிரம் கன அடியாக உயர்ந்துள்ள நிலையில் வெளியேற்றப்படும் நீரின் அளவும் 40 ஆயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

அணையின் நீர் இருப்பு 93.83 டி.எம்.சி.யாக உள்ள நிலையில், டெல்டா பாசனத்திற்காக திறக்கப்படும் நீரின் அளவு 37,500 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதேபோல், கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்திற்காகவும் அணையில் இருந்து வினாடிக்கு 400 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

அடுத்த செய்தி