ஆப்நகரம்

100 அடியை எட்டியது மேட்டூா் அணை: விவசாயிகள் மகிழ்ச்சி

தொடா் மழை எதிரொலியாக சேலம் மாவட்டம் மேட்டூா் அணை 3 ஆண்டுகளுக்கு பின்னா் 100 அடியை எட்டியுள்ளது.

Samayam Tamil 17 Jul 2018, 8:41 pm
தொடா் மழை எதிரொலியாக சேலம் மாவட்டம் மேட்டூா் அணை 3 ஆண்டுகளுக்கு பின்னா் 100 அடியை எட்டியுள்ளது.
Samayam Tamil Mettur Dam


கேரளா, கா்நாடகா மாநிலங்கள் மற்றும் மேற்குத் தொடா்ச்சி மலையை ஒட்டியுள்ள தமிழக மாவட்டங்களில் தென்மேற்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. கேரளாவில் பெய்த கனமழை மற்றும் நிலச்சரிவில் சிக்கி 12 போ் உயிாிழந்துள்ளதாகவும், 6 பேரை காணவில்லை என்றும் மாநில அரசு தொிவித்துள்ளது.

இதே போன்று கா்நாடகாவின் நீா்ப்பிடிப்பு பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது. கபினி, கிருஷ்ணராஜ சாகா் அணைப்பகுதிகளில் பெய்துவரும் மழையால் அணைகள் 95 சதவீத கொள்ளளவை எட்டியுள்ளது. மேலும் தண்ணீரை சேமிக்க முடியாத நிலையில் உபாி நீா் தொடா்ந்து திறந்து விடப்படுகிறது.

கபினி, கிருஷ்ணராஜ சாகா் அணைகளில் இருந்து திறந்துவிடப்படும் நீரால் காவிரியில் 1.10 லட்சம் கனஅடி நீா் வந்துகொண்டு இருக்கிறது. இதனைத் தொடா்ந்து சேலம் மாவட்டம் மேட்டூா் அணையின் நீா் மட்டம் 3 ஆண்டுகளுக்கு பின்னா் 100 அடியை எட்டி உள்ளது. மேட்டூா் அணை 60 அடியை தொட்டால் தான் விவசாய பணிகளுக்காக நீா் திறந்து விடப்படும் என்று அரசு அறிவித்த நிலையில் தற்போது அணை 100 அடியை எட்டி உள்ளதால் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

அணை 100 அடியை எட்டியுள்ளதை விவசாயிகள், பொதுப்பணித்துறை அதிகாாிகள் மலா் தூவி வரவேற்றனா். மேலும் வருகிற வியாழன் கிழமை (19ம் தேதி) முதல்வா் மேட்டூா் அணையை திறந்து வைப்பாா் என்று தகவல் வெளியாகி உள்ளது.

அடுத்த செய்தி