ஆப்நகரம்

இந்த வருசம் தண்ணிக்கு பிரச்சினையில்லை: நிரம்பும் மேட்டூர் அணை!

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழைப் பெய்துவருவதால் மேட்டூர் அணை நீர்மட்டம் ஒரே நாளில் ஒரு அடி அதிகரித்துள்ளது.

Samayam Tamil 18 Oct 2019, 8:59 am
வடகிழக்கு பருவமழை கடந்த ஆண்டு பொய்த்துப் போனதால் மாநிலம் முழுவதும் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவியது. சென்னை போன்ற பெரு நகரங்களில் வணிக நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை வீட்டிலிருந்தபடியே வேலை பார்க்க கூறின. மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் மக்கள் தண்ணீருக்காக குடங்களைக் கொண்டு பல கிலோமீட்டர்கள் நடந்தனர்.
Samayam Tamil Untitled collage (1)


Chennai Rains: இந்த லிஸ்ட்ல உங்க ஊர் இருக்கா? இன்று புரட்டி எடுக்கப் போகும் மிக கனமழை!

தென்மேற்கு பருவமழை பெய்தபின் இந்த தண்ணீர் தட்டுப்பாடு சற்று குறைந்தது. வழக்கத்தைவிட தென்மேற்கு பருவகாற்று அதிக நாள் நீடிக்க அதனால் தமிழ்நாட்டிலும்கூட பல இடங்களில் மழைபெய்து நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்தது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்துவரும் கனமழை காரணமாக மேட்டூர் அணையும் தொடர்ந்து நிரம்பியது.

இந்நிலையில் வடகிழக்கு பருவ மழை 16ஆம் தேதி தொடங்கியது. கடந்த ஆண்டைப் போல் ஏமாற்றாமல் இயல்பான மழை இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் அனைத்து மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்துவருவதால் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துவருகிறது. தொடர்ந்து இது அதிகரிக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

நிலத்தடி நீர்மட்டம் அதிகரித்தாலும் பல மாவட்டங்கள் தங்கள் குடிநீர், விவசாய தேவைகளுக்கு காவிரி ஆற்றை நம்பியே உள்ளன. இதனால் மேட்டூர் அணையின் நீர்மட்டத்தை தொடர்ந்து கவனித்துவருகின்றனர்.

நீலகிரி.. பள்ளிகளுக்கு லீவு விட்ட கலெக்டர்!

இந்நிலையில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழைப் பெய்துவருவதால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்துவருகிறது.

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு தற்போது வினாடிக்கு 8,347 கன அடியிலிருந்து 34,722 கன அடியாக அதிகரித்துள்ளது. தொடர் நீர்வரத்து அதிகரிப்பை அடுத்து அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் ஒரு அடி உயர்ந்து 114.83 அடியாக உள்ளது. 2500 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. அணையின் நீர்மட்டம் அதிகரித்திருப்பது விவசாயிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த செய்தி