ஆப்நகரம்

படிப்படியாக உயரும் மேட்டூர் அணை நீர்மட்டம்; ஓரளவு தீரும் குடிநீர் பிரச்சனை...!

மேட்டூர் அணையின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து வருவதால், குடிநீர் பிரச்சனை ஓரளவு தீரும் என்று கூறப்படுகிறது.

TNN 7 Aug 2017, 12:36 pm
சேலம்: மேட்டூர் அணையின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து வருவதால், குடிநீர் பிரச்சனை ஓரளவு தீரும் என்று கூறப்படுகிறது.
Samayam Tamil mettur dam water level increases
படிப்படியாக உயரும் மேட்டூர் அணை நீர்மட்டம்; ஓரளவு தீரும் குடிநீர் பிரச்சனை...!


தமிழகம் போதிய பருவமழை இன்றி கடும் வறட்சியில் தவித்து வருகிறது. தற்போது தமிழகம் முழுவதும் ஆங்காங்கே நல்ல மழை பெய்கிறது.

இதற்கிடையில் கர்நாடகாவில் உள்ள காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையால், கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகளின் நீர்மட்ட உயர்ந்து வருகிறது.

இதையடுத்து அணைகளில் இருந்து நீர் திறக்கப்பட்டது. இந்த தண்ணீர் மேட்டூர் அணையை அடைந்து, நீர்மட்டம் ஓரளவு உயர்ந்தது.

இந்நிலையில் அணைக்கு நீர்வரத்து 7,083 கன அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர் வரத்தால் 6 மாதங்களுக்கு பின், மேட்டூர் அணை 40 அடியை தொட்டது.

இன்று காலை நிலவரப்படி, நீர்மட்டம் 40.08 அடியாக உள்ளது. நீர் இருப்பு 12.13 டி.எம்.சி. ஏற்கனவே குடிநீருக்கான அணையில் இருந்து நீர் திறக்கப்பட்டுள்ளது.

தற்போதைய நீர்வரத்து அதிகரிப்பால் சேலம், நாமக்கல், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களின் குடிநீர் பிரச்சனை ஓரளவு தீரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Mettur Dam water level increases.

அடுத்த செய்தி