ஆப்நகரம்

நள்ளிரவில் எம்ஜிஆர், ஜெயலலிதா சிலைகள் அகற்றம்; அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்

திருவண்ணாமலை மற்றும் ஆரணியில் தடையை மீறி வைக்கப்பட்ட எம்ஜிஆர், ஜெயலலிதா சிலைகள் இரவோடு இரவாக அகற்றப்பட்டதால், போலீசாருக்கும் அதிமுகவினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

Samayam Tamil 28 Feb 2018, 7:15 am
திருவண்ணாமலை மற்றும் ஆரணியில் தடையை மீறி வைக்கப்பட்ட எம்ஜிஆர், ஜெயலலிதா சிலைகள் இரவோடு இரவாக அகற்றப்பட்டதால், போலீசாருக்கும் அதிமுகவினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
Samayam Tamil mgr and jayalalithaa stature removed by police in tiruvanamalai
நள்ளிரவில் எம்ஜிஆர், ஜெயலலிதா சிலைகள் அகற்றம்; அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் நெடுஞ்சாலையை ஆக்கிரமித்து எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா சிலை வைக்கப்பட்டதாக போலீசாருக்கு புகார்கள் வந்த வண்ணம் இருந்தன.

இதையடுத்து நேற்று நள்ளிரவில் பொக்லைன் இயந்திரத்தின் உதவியோடு திருவண்ணாமலை போலீசார் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா சிலைகளை அகற்ற முயற்சித்தனர். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த அதிமுகவினர் சிலைகளை அகற்றக் கூடாது என்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதனால், போலீசாருக்கும் அதிமுகவினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இதே போல், ஆரணியில் அனுமதியின்றி வைக்கப்பட்ட எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா சிலைகளை போலீசார் இரவோடு இரவாக அகற்றினர்.

அடுத்த செய்தி