ஆப்நகரம்

எம்.ஜி.ஆர். மருமகன் கொரோனாவுக்கு பலி!

கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். அண்ணன் மகன் சிகிச்சை பலனின்றி காலமானார்

Samayam Tamil 11 Sep 2020, 7:36 pm
மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் அண்ணன் எம்.ஜி.சக்ரபாணி. அவர் சொன்னதை தட்டாமல் கேட்பவர் எம்.ஜி.ஆர். எம்.ஜி.ஆரின் வெற்றியில் பெரும் பங்கு இவருக்கு உண்டு. அலிபாபாவும் நாற்பது திருடர்களும் படத்தில் எம்.ஜி.ஆருக்கு அண்ணனாக நடத்தது உள்பட பல்வேறு படங்களில் அவருடன் இணைந்து நடித்திருக்கிறார்.
Samayam Tamil எம்.சி.சந்திரன்
எம்.சி.சந்திரன்


இந்த நிலையில், எம்.ஜி.சக்கரபாணியின் மகன் எம்.சி.சந்திரன் (75), கொரோனாவால் பாதிக்கப்பட்டு சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இன்று காலை அவரது உடல் நிலை மோசமானடையடுத்து, சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததை அறிந்து வேதனையுற்றதாக தெரிவித்துள்ள முதல்வர் பழனிசாமி, குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துள்ளார்.

தியேட்டர்களில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் ஒளிபரப்பா? - அமைச்சர் விளக்கம்!

சென்னை அண்ணா நகர் சாந்தி காலணியில் தனது மனைவியுடன் வசித்து வந்த எம்.சி.சந்திரனின் உடல் சுகாதாரத்துறை வழிகாட்டுதலின்படி அவரின் குடும்பத்தினர் முன்னிலையில் நல்லடக்கம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஜெயலலிதா மறைவுக்கு பின்னர், 2017ஆம் ஆண்டு ஆர்.கே.நகர் தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட வேட்புமனுத் தாக்கல் செய்த எம்.சி.சந்திரன், அதிமுகவினரின் ஆதரவை கோரியிருந்தார். பின்னர், அண்ணா எம்.ஜி.ஆர் அம்மா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற கட்சியை தொடங்கினார். ஆனால், அவரது அரசியல் அந்த அளவிற்கு எடுபடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி