ஆப்நகரம்

எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா அரசு விழா இல்லை; ஆர்.டி.ஐ தகவல்

எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா அரசு விழா கிடையாது என்று தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 16 Feb 2018, 10:56 pm
எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா அரசு விழா கிடையாது என்று தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil mgr centenary function is not a governement event says rti
எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா அரசு விழா இல்லை; ஆர்.டி.ஐ தகவல்


எம்ஜிஆரின் நூறாவது பிறந்தநாளை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் அதிமுக அரசு, எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவை கோலாகலமாக கொண்டாடியது.


இந்நிலையில், கோவையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் டேனியல் ஏசுதாஸ், கடந்த 2016-17ம் ஆண்டுகளில், அரசு சார்பில் நடத்தப்பட்ட விழாக்கள் குறித்தும் அதற்கான செலவினங்கள் குறித்தும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேள்வி எழுப்பினார்.

இதற்கு செய்தி மற்றும் மக்கள் தொடர்பு த்துறை பதில் அளித்துள்ளது. அதன்படி, அரசு விழாக்கள் பட்டியலில் அதிமுக கொண்டாடிய எம்ஜிஆர் நூற்றாண்டு விழா இடம் பெறவில்லை.

இது குறித்து டேனியல் கூறுகையில், எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் கோடிக்கணக்கான பணம் செலவிடப்பட்டுள்ளதாகவும், இந்த செலவினங்கள் வெளியே வந்தால் மிகப்பெரிய எதிரப்புகள் வரும் என்பதற்காகவே அரசு இதை மறைக்கப்பார்ப்பதாகவும் தெரிவித்தது.

அடுத்த செய்தி