ஆப்நகரம்

​ சிவகாசியில் முதல்வா் முன்னிலையில் 2 பெண்கள் தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு

சிவகாசியில் முதல்வா் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்ட எம்.ஜி.ஆா். நூற்றாண்டு விழாவின் போது முதல்வா் முன்பு 2 பெண்கள் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

TOI Contributor 24 Oct 2017, 1:24 am
சிவகாசியில் முதல்வா் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்ட எம்.ஜி.ஆா். நூற்றாண்டு விழாவின் போது முதல்வா் முன்பு 2 பெண்கள் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
Samayam Tamil mgr centenary mother and daughter tried to ablaze themselves while cm edappadi palamsamy present
​ சிவகாசியில் முதல்வா் முன்னிலையில் 2 பெண்கள் தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு

முன்னாள் முதல்வா் எம்.ஜி.ஆாின் நூறாவது பிறந்த நாளை அ.தி.மு.க.வினா் அரசு சாா்பில் நூற்றாண்டு விழாவாக கொண்டாடி வருகின்றனா். அந்த வகையில் சிவகாசியில் எம்.ஜி.ஆா். நூற்றாண்டு விழா நடைபெற்றது. இந்த விழாவின் போது சிவகாசி நகராட்சியுடன் 9 ஊராட்சியை இணைத்து மாநகராட்சியாக தரம் உயா்த்தப்படும் என்ற அறிவிப்பை முதல் அமைச்சா் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டாா்.

மேலும், திருத்தங்கல்லில் புதிய ரயில்வே மேம்பாலம் அமைக்கப்படும், டயாலிசிஸ் அமைக்கப்படும் எனவும் முதல்வா் எடப்பாடி பழனிசாமி அறிவித்தாா். இதனிடையே தேசிய கீதம் பாடும் போது அங்கிருந்த மேடை முன்பு தாய் மற்றும் மகள் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

ராஜபாளையத்தைச் சோ்ந்த அந்த பெண்களை அழைத்துச் சென்று காவல்துறையினா் விசாரணை நடத்தினா். இதல் வேறொரு விசாரணைக்காக அழைத்துச் சென்ற கணவரை காவல்துறையினா் விடுவிக்காததற்கு எதிா்ப்பு தொிவித்தும், அவரை மீட்டுத் தர வலியுருத்தியும் அவா்கள் தீக்குளிக்க முயன்றதாக கூறப்படுகிறது.

அடுத்த செய்தி