ஆப்நகரம்

கபசுர குடிநீர்தான் மருந்தா? இதன் முடிவில் தெரிந்துவிடும்!

2018ஆம் ஆண்டு கபசுர குடிநீர் குறித்து ஆய்வு செய்த எம்ஜிஆர் பல்கலைக்கழகம், இப்போது மீண்டும் ஆய்வுகளைத் தொடங்கியது...

Samayam Tamil 6 Jun 2020, 6:51 pm
உலகமே கொரோனா நோயை எப்படிக் கையாள்வது எனப் புரியாமல் தவித்து வரும் சூழலில், தமிழ்நாட்டில் இந்த வைரஸ் தொற்று அபாயத்தை முறியடிக்க அனைவரும் உச்சரிக்கும் ஒரு சொல் கப சுர குடிநீர்தான்.
Samayam Tamil கபசுர குடிநீர்தான் மருந்தா? இதன் முடிவில் தெரிந்துவிடும்!
கபசுர குடிநீர்தான் மருந்தா? இதன் முடிவில் தெரிந்துவிடும்!


அரசு மருத்துவமனைகள் தொடங்கி மாநிலத்தில் உள்ள பெரும்பாலானோர் வீட்டில் இந்த வகை குடிநீர்தான் இப்போதைய நேரத்தில் பிரதான மருந்தாக வழங்கப்படுகிறது. கொரோனாவை விரட்ட இந்த வகை குடிநீர் நமக்கு ஆற்றலை அளிக்கிறது எனச் சித்த மருத்துவர்கள் வழங்கிய அறிவுரையின்படி இந்த வழியை நாம் பின்பற்றி வருகிறோம்.

இந்த குடிநீர் அரசு மருத்துவமனைகளில் வழங்கப்பட்டு வந்தாலும், கொரோனாவை விரட்ட இது அதிகாரப்பூர்வ மருந்து என இதுவரை அரசால் அறிவிக்கப்படவில்லை. சித்த மருந்து என்பதால் இது தொடர்பான ஆய்வுகளையும் அரசு முறையாக முன்னெடுக்காமல் இழுத்தடிப்பு செய்து வருகிறது.

திட்டதிட்ட டெங்குகாய்ச்சலை எதிர்கொள்ள நிலவேம்பு கசாயம் நமக்கு அளிக்கும் பலனைப் போலவே, இந்த கபசுர குடிநீரும் பயன் தருகிறது என்கிறார்கள். இந்நிலையில் கபசுர குடிநீர் உண்மையில் கொரோனா வைரசை எதிர்கொள்ள மனித உடலுக்கு ஆற்றல் வழங்குகிறதா என்பதைப் பிரபல தனியார் பல்கலைக்கழகமான எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகம் தொடங்கியுள்ளது.

சலூன் கடைக்காரர் மகள் நேத்ரா ஐ.நா. தூதர் அல்ல... திடுக்கிடும் திருப்பம்

கபசுர குடிநீர் தொடர்பாகச் சுகாதாரத் துறை எம்ஜிஆர் மருத்து பல்கலைக்கழகத்தை ஆய்வு மேற்கொள்ளக் கேட்டுக் கொள்ளப் பட்டதாக சில தினங்கள் முன் தகவல் வெளியாகியது. இதன் அடிப்படையில் இப்போது அந்த ஆய்வுகளைக் குறிப்பிட்ட மருத்துவ பல்கலைக்கழகம் இப்போது தொடங்கியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

எம்ஜிஆர் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் சுதா சேஷையன், கபசுர குடிநீர் தொடர்பான ஆய்வுகள் தொடங்கியதை உறுதி செய்துள்ளார். கபசுர குடிநீர் தொடர்பாக 2018ஆம் ஆண்டு இதே பல்கலைக்கழகம் சில ஆய்வுகளை மேற்கொண்டது. தொடர்பான ஆய்வுகளின் இறுதியில், இந்த வகை குடிநீர் மிகவும் சக்தி வாய்ந்தது என அப்போது குறிப்பிட்டிருந்தது.

கபசுரம் என்றால் சளி, காய்ச்சல் என்பதைக் குறிக்கிறது. இந்த குடிநீர் மிகத் தீவிரமான காய்ச்சல், சளியை விரட்டியடிக்கும் எனச் சித்த மருத்துவர்கள் இது குறித்துக் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி