ஆப்நகரம்

தாது மணல் கொள்ளை ,ரூ10 ஆயிரம் கோடி இழப்பு - குமரேசன்

சென்னை: தொழிலதிபர் வைகுண்டராஜனின் வி.வி.மினரல்ஸ் நிறுவனம், 50 லட்சம் டன் தாது மணலை கொள்ளையடித்து தமிழக அரசுக்கு ரூ10 ஆயிரம் கோடி இழப்பு ஏற்படுத்தியதாக வைகுண்டராஜனின் சகோதரர் குமரேசன் குற்றம்சாட்டியுள்ளார்.

TOI Contributor 28 Aug 2016, 2:55 pm
சென்னை: தொழிலதிபர் வைகுண்டராஜனின் வி.வி.மினரல்ஸ் நிறுவனம், 50 லட்சம் டன் தாது மணலை கொள்ளையடித்து தமிழக அரசுக்கு ரூ10 ஆயிரம் கோடி இழப்பு ஏற்படுத்தியதாக வைகுண்டராஜனின் சகோதரர் குமரேசன் குற்றம்சாட்டியுள்ளார்.
Samayam Tamil mineral sand scam loss of rs 10 crore
தாது மணல் கொள்ளை ,ரூ10 ஆயிரம் கோடி இழப்பு - குமரேசன்

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய வைகுண்டராஜனின் சகோதரர் குமரேசன் :" மத்திய அரசின் நிறுவனங்கள் மூலம் விதித்த தடையை மீறி வைகுண்டராஜன், அவரது விவி மினரல்ஸ் நிறுவனம் மூலம் தொடர்ந்து தாது மணலை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறார். இதனால், தமிழக அரசுக்கு ரூ10,000 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டு உள்ளது.
இந்த தாது மணல் எந்தெந்த வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது என்பதற்கான முழுமையான ஆதாரங்கள் என்னிடம் உள்ளன. அந்த ஆதாரங்களை முதல்வரிடம் அளிக்க உள்ளேன். இதுவரை தடையை மீறி 50 லட்சம் டன் அளவுக்கு தாது மணலை வைகுண்டராஜன் வெளிநாடுகளுக்கு கடத்தியுள்ளார்.

இந்த சட்ட விரோத நடவடிக்கையை அவர் ரவுடிகளின் பாதுகாப்புடன் நடத்தி வருகிறார். இப்படி முறைகேடாக அள்ளப்பட்ட தாது மணல், 15 கிடங்குகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ளது. இந்த கடத்தல் தொடர்பாக இதுவரை 50 காவல் நிலையங்களில் புகார் கொடுத்துள்ளோம். ஆனால், இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.
சட்டவிரோத தாது மணல் கடத்தலில் ஈடுபட்ட வைகுண்டராஜனின் சொத்துக்களை அரசுடைமையாக்க வேண்டும் என்று அவர் கூறினார்.

அடுத்த செய்தி