ஆப்நகரம்

உதயநிதிக்கு உச்ச பதவி: அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்!

உதயநிதி ஸ்டாலின் வருங்காலத்தில் முதலமைச்சர் பதவியை அலங்கரிப்பார் என அமைச்சர் அன்பில் மகேஷ் பேசியுள்ளார்.

Samayam Tamil 24 Jun 2022, 10:35 am
திமுக அமைச்சரவையில் உதயநிதி ஸ்டாலின் விரைவில் இடம்பெறுவார் என கூறப்படும் நிலையில் வருங்கால முதலமைச்சர் என உதயநிதியை குறிப்பிட்டு பேசியுள்ளார் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி.
Samayam Tamil udhayanidhi stalin


மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சியமைத்த போதே அமைச்சரவையில் உதயநிதி இடம்பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தேவையற்ற விமர்சனங்களை தவிர்ப்பதற்காக பின்னர் பார்த்துக்கொள்ளலாம் என ஸ்டாலின் மறுத்துவிட்டதாக அப்போதே தகவல் வெளியானது.

அதன் பின்னர் கடந்த ஆறு மாதங்களாக உதயநிதி அமைச்சராவார் என்ற குரல்கள் திமுகவுக்குள் ஒலித்து வருகின்றன. இதை முதன்முறையாக வெளிப்படையாக தொடங்கி வைத்தவர் அமைச்சரும் உதயநிதியின் நெருங்கிய நண்பருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி.
திமுகவை அழிக்க முடியாது: முதல்வர் ஸ்டாலின் பேச்சு!
அமைச்சரவையிலேயே இன்னும் இடம்பெறாத நிலையில் தமிழகத்தின் வருங்கால முதலமைச்சராக உதயநிதி ஸ்டாலின்தான் பொறுப்பேற்பார் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் வெளிப்படையாக பேசியுள்ளார்.

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார் கோவிலில் மறைந்த திமுக தலைவர் கலைஞர் கருணாநிதியின் 99ஆவது பிறந்த நாளை முன்னிட்டு திமுக சார்பில் பொதுக்கூட்டம் நடந்தது. இதில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

அப்போது பேசிய அவர், “தமிழகத்தில் தற்போது திராவிட மாடல் ஆட்சி நடந்து வருகிறது. சுயமரியாதை, சமூகநீதி, சமத்துவம், ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலை, பெண் விடுதலை இவை எல்லாம் ஒருங்கிணைத்தது தான் திராவிட மாடல். இந்த ஆட்சியை முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கி வருகிறார்.
நெல் கொள்முதல் நிலையங்களில் ஆய்வு: ராதாகிருஷ்ணன் உத்தரவு!
சட்டப்பேரவையில் அமைச்சர்கள் முதலமைச்சர் ஸ்டாலினை பாராட்டினால், மக்கள் ஓட்டுபோட்டு சட்டப்பேரவைக்கு அனுப்பி வைத்தது மக்களின் பிரச்சனையை பேசுவதற்காக மட்டும்தான் என்று அவரே கூறுவார். ஆனால் அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் மற்றும் பாஜக எம்எல்ஏக்களே முதலமைச்சரை பாராட்டி வருகின்றனர்.

தமிழகத்தில் உள்ள இளைய சமுதாயத்தை பட்டை தீட்ட வேண்டும் என்ற நோக்கத்தோடு, எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின், திராவிட மாடல் பாசறை பயிற்சி முகாம்களை நடத்தி வருகிறார்.

வருங்காலத்தில் தமிழகத்தின் முதலமைச்சராக ஆட்சி செய்ய போகிறவர் உதயநிதி ஸ்டாலின் தான். வரும் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமரை நிர்ணயிக்கப் போவது முதலமைச்சர் ஸ்டாலின் தான்” எனக் கூறினார்.

அடுத்த செய்தி