ஆப்நகரம்

அமைச்சர் துரைகண்ணுக்கு தீவிர சிகிச்சை!

தமிழக அமைச்சர் துரைக் கண்ணுக்கு காவேரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.

Samayam Tamil 25 Oct 2020, 12:10 pm
கொரோனா தொற்று முன்களப் பணியாளர்கள், மக்கள் பணிகளில் ஈடுபட்டுள்ள அரசு ஊழியர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் உள்ளிட்ட பலருக்கும் அதிகமாக பரவி வருகிறது.
Samayam Tamil duraikannu


சேலம் மாவட்டத்தில் உயிரிழந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் இறுதி சடங்கு நிகழ்வுக்கு அக்டோபர் 13ஆம் தேதி சென்று கொண்டிருந்தார் வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு. அப்போது அவருக்கு திடீரென உடல்நலக் கோளாறு ஏற்பட்டது. இதனால் அவர் உடனடியாக விழுப்புரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

பின்னர் 14ஆம் தேதி சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். எழுபது வயதைக் கடந்த அமைச்சர் துரைக்கண்ணுக்கு அங்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

தமிழ்நாட்டில் அடுத்தகட்ட தளர்வு: எதற்கெல்லாம் அனுமதி தெரியுமா?

இந்நிலையில் இன்று அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. எனவே நுரையீரல் பாதிப்புகளை சரிசெய்ய அமைச்சர் துரைக் கண்ணுக்கு எக்மோ சிகிச்சை அளிக்கப்படுகிறது. பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் கொரோனாவால் பாதிக்கப்பட்ட போது நுரையீரல் பாதிப்பை சரி செய்ய அவருக்கு எக்மோ சிகிச்சை அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

சசிகலாவை சந்திக்க தயாராகும் அமைச்சர்கள்? க்ளு கொடுத்த எடப்பாடி!

கொரோனாவுக்கு சிகிச்சை பெற்றுவந்த அமைச்சர்கள் செல்லூர் ராஜு, கே.பி.அன்பழகன் உள்ளிட்டோர் நலமடைந்து மீண்டும் மக்கள் பணிக்கு திரும்பியுள்ள நிலையில் விரைவில் அமைச்சர் துரைக்கண்ணும் நலமடைந்து பணிக்கு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த செய்தி