ஆப்நகரம்

அரசியல் ஆதாயத்திற்காக போராடுகிறார் ஸ்டாலின்!

அரசியல் ஆதாயத்திற்காகவே ஸ்டாலின் போராடுவதாக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 5 Apr 2018, 8:18 pm
அரசியல்ஆதாயத்திற்காகவேஸ்டாலின் போராடுவதாக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார்தெரிவித்துள்ளார்.
Samayam Tamil 88b9f2c95eb675adfde082f9b8097e9b


உச்சநீதிமன்ற உத்தரவுப்படி காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்கவில்லை. இதனைக் கண்டித்து தமிழகம் முழுவதும் கடந்த 5 நாட்களாக தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அதிமுக அமைச்சர் ஜெயகுமார் கூறியிருப்பதாவது ‘ உண்ணாவிரதம் உள்ளிட்ட ஜனநாயக வழி போரட்டங்களுக்கு ஆதரவு உண்டு. முன்பே அறிவுறுத்தாமல் திடீரென மறியல் செய்வது முறையல்ல. 356ஆவதுபிரிவின்கீழ் ஆட்சியை கலைக்க ஸ்டாலின் முயற்சி செய்தார்.

ஆட்சியை கவிழ்க்கும் ஸ்டாலின் முயற்சி நிறைவேறவில்லை. ஆட்சியை கவிழ்க்க முடியாததால் அரசியல் ஆதாயத்திற்காக ஸ்டாலின் போராடுகிறார். பேருந்துகள் மீது கற்கள்வீசப்படுள்ளன, காவல்துறைஅதிகாரி மீதும் கல் வீசப்படுள்ளது. ஆதிகால மனிதர்கள்போல கற்களை வீசி திமுகவினர் தாக்குதல் நடத்துவதை ஏற்க முடியாது.நாகரீகம்வளந்துவிட்ட சூழலில் கற்களை வீசும் அளவுக்கு கற்காலத்திற்கு சென்றுவிட்டதா திமுக?

உச்சநிதிமன்றத்தில் வலிமையாக வாதாடி தமிழகத்திற்கு நீதிகிடைக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. மறியல், கல்வீச்சு என சட்டம் ஒழுங்கு பாதிப்பை ஏற்படுத்த முயற்சி செய்கிறார். காவிரிமேலாண்மை வாரியம்,நீர் முறைப்படுத்தும் குழு என அனைத்தும் அடங்கியதே ஸ்கீம். எந்தவித அறிவிப்பும் இன்றி எதிர்கட்சியினர் போரட்டம் நத்துவதை ஏற்க முடியாது என்று அவர் கூறினார்.

அடுத்த செய்தி