ஆப்நகரம்

இலங்கையை நோக்கிப் பாயும் அமைச்சர் ஜெயக்குமார்

எல்லை தாண்டி மீன் பிடிப்பதைக் கட்டுப்படுத்துவதற்காக என்று இலங்கை அரசு உருவாக்கியுள்ள சட்டத் திருத்த மசோதாவுக்கு அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்தார்.

Samayam Tamil 26 Jan 2018, 12:53 pm
சென்னை: எல்லை தாண்டி மீன் பிடிப்பதைக் கட்டுப்படுத்துவதற்காக என்று இலங்கை அரசு உருவாக்கியுள்ள சட்டத் திருத்த மசோதாவுக்கு அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்தார்.
Samayam Tamil minister jayakumar condemns sri lankan amendment
இலங்கையை நோக்கிப் பாயும் அமைச்சர் ஜெயக்குமார்


தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடிப்பதாகக் கூறி அவர்களை படகுகளுடன் கைது செய்வது இலங்கை கடற்படைக்கு வாடிக்கையாக உள்ளது. இந்நிலையில், எல்லை தாண்டி மீன் பிடிப்பதைக் கட்டுப்படுத்துவதற்காக என்று இலங்கை அரசு சட்டத் திருத்த மசோதா ஒன்றை உருவாக்கியுள்ளது.

எல்லை தாண்டும் மீனவர்களுக்கு ரூ.20 லட்சம் முதல் ரூ.7 கோடி வரை அபராதம் விதிக்கலாம் என்று இந்த மசோதா கூறுகிறது. இதற்கு தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்களிடம் பேசிய அவர், கச்சத்தீவு நம் கையைவிட்டு போனதுதான் மீனவர் பிரச்னைக்கு முக்கியமான காரணம் என்றார். மேலும், “இலங்கையின் மசோதா அதிர்ச்சி அளிக்கிறது. இதை ஏற்கவே முடியாது. இலங்கை அரசு மனிதாபிமானம் இல்லாமல் சட்டம் கொண்டு வருகிறது. இது குறித்து நடவடிக்கை எடுக்க பிரதமர் மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சருக்கு அழுத்தம் கொடுப்போம்.” என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

அடுத்த செய்தி