ஆப்நகரம்

நான் பேசுனாவே மீம்ஸா; ஏன்பா இப்படி பண்றீங்க; ஃபீலிங்கில் அமைச்சர் ஜெயக்குமார்!

தான் பேசும் கருத்துகள் அனைத்தையும், மீம்ஸாக மாற்றுவது ஏற்றுக் கொள்ள இயலாதது என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

TNN 2 Nov 2017, 11:56 am
சென்னை: தான் பேசும் கருத்துகள் அனைத்தையும், மீம்ஸாக மாற்றுவது ஏற்றுக் கொள்ள இயலாதது என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil minister jayakumar feels about his speech into memes
நான் பேசுனாவே மீம்ஸா; ஏன்பா இப்படி பண்றீங்க; ஃபீலிங்கில் அமைச்சர் ஜெயக்குமார்!


சென்னை விமான நிலையத்தில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது பேசிய அவர், மழை பாதிப்புகளில் இருந்து மீட்பு நடவடிக்கைகள் வேகமாக நடைபெற்று வருவதாக குறிப்பிட்டார்.

ஆனால் நான் என்ன சொன்னாலும் மீம்ஸ் போட்டு, மக்களை திட்டமிட்டு திசை திருப்புகிறார்கள். இதற்காக மு.க.ஸ்டாலின், டிடிவி தினகரன் தலைமையில் குழுக்கள் செயல்பட்டு வருகின்றன.

என்னுடைய பத்திரிகையாளர் சந்திப்புகளுக்கு பிறகு, எனது கருத்தை எப்படி மீம்ஸ் போடுவது என்று சிந்திப்பதற்காகவே பணம் கொடுத்து ஆட்கள் அமர்த்தியுள்ளார்கள்.

இது ஜனநாயக விரோதம் என்று குற்றம்சாட்டினார். இதுபோன்ற சம்பவங்களை ஒருபோதும் ஏற்க முடியாது என்று வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

Minister Jayakumar feels about his speech into memes.

அடுத்த செய்தி