ஆப்நகரம்

Vijay Sethupathi: விஜய் சேதுபதி பட சர்ச்சை: அமைச்சர் ஜெயக்குமாரின் ரியாக்‌ஷன்..!

இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வரலாற்று படத்தில் விஜய்சேதுபதி நடிப்பது குறித்து அமைச்சர் ஜெயக்குமார் கருத்து தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 17 Oct 2020, 7:37 pm
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை படத்தை '800' என்ற தலைப்பில் 5 மொழிகளில் படமாக்க உள்ளனர். இதில் முத்தையா கதாபாத்திரத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்கிறார். இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு படத்தின் போஸ்டர் வெளியானது. இதையடுத்து முத்தையா முரளிதரன் ஈழ தமிழர்களுக்கு எதிராக சிங்கள அரசுக்கு ஆதரவு அளித்தவர் என்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்த தமிழ் அமைப்புகளும், அரசியல் கட்சிகளும் விஜய் சேதுபதி இந்த படத்தில் இருந்து விலக வேண்டும் என்று அறிவுறுத்தியும், எச்சரித்தும் வருகின்றன.
Samayam Tamil file pic


ஆனால், நடிகர் விஜய் சேதுபதியிடம் இருந்தோ, இப்படத்தை இயக்கும் ஸ்ரீபதி சபாபதியிடம் இருந்தோ எந்த விளக்கமும் அதிகாரப்பூர்வமாக வரவில்லை. இதற்கிடையில், சர்ச்சைகளுக்கு விளக்கம் அளித்து முத்தையா முரளிதரனே அறிக்கை வெளியிட்டார். அந்த அறிக்கையில், ''30 வருடங்களுக்கு மேல் போர் சூழ்நிலையில் இருந்த நாடு இலங்கை. அதன் மத்தியில் தான் எங்கள் வாழ்க்கை பயணம் நடைபெற்றது. இந்த சூழலில் இருந்து எப்படி நான் கிரிக்கெட் அணியில் இடம்பெற்று சாதித்தேன் என்பது பற்றிய படம் தான் 800.

நான் 2009ஆம் ஆண்டு தான் என் வாழ்க்கையில் மிக மகிழ்ச்சியான நாள் என்று 2019ல் கூறியதை தமிழர்களை கொன்று குவித்த நாள் தான் முத்தையா முரளிதரனின் வாழ்க்கையில் மகிழ்ச்சியான நாள் என்று திரித்து எழுதுகிறார்கள். போர் முடிவுற்றது ஒரு சராசரி மனிதனாக பாதுகாப்பான உணர்வு மட்டுமல்லாது, கடந்த 10 ஆண்டுகளாக இருபுறமும் உயிரிழப்புகள் ஏதும் இல்லாமல் இருப்பதை வைத்தே 2009 ஆம் ஆண்டு எனது வாழ்க்கையில் மகிழ்ச்சியான நாள் என்ற கருத்தைத் தெரிவித்தேன் '' என இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியிருந்தார்.

கொட்டித்தீர்க்கப் போகும் கனமழை: இந்தப் பகுதிகளெல்லாம் உஷார்!

தமிழகம் முழுக்க இந்த திரைப்படம் குறித்து விவாதங்கள் எழுந்துள்ள நிலையில், தமிழக மீன் வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தனது கருத்தை தெரிவித்துள்ளார். '' இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிப்பதை அவரது ரசிகர்கள் விரும்பவில்லை. தமிழர்களுக்கு எதிராக கருத்தை தெரிவித்த அவருடைய கதாபாத்திரத்தில் நடிப்பது குறித்து விஜய் சேதுபதி மறுபரிசீலனை செய்ய வேண்டும் என அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.

அடுத்த செய்தி