ஆப்நகரம்

தீவிர சிகிச்சை பிரிவில் அமைச்சர் காமராஜ்: மருத்துவமனைக்கு விரைந்த முதல்வர் பழனிசாமி!

தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள உணவுத்துறை அமைச்சர் காமராஜ் உடல்நிலை குறித்து விசாரிக்க தமிழக முதல்வர் மருத்துவமனைக்கு செல்லவுள்ளார்

Samayam Tamil 19 Jan 2021, 10:09 pm
கொரோனாவைத் தடுக்கும் பணியில் முன்னணியில் நிற்கும் மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மைப் பணியாளர்கள் ஆகியோரும் தன்னார்வலர்கள், அரசு அதிகாரிகள் உள்ளிட்டோரும் கொரோனா பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். திமுக எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் கொரோனா நிவாரணப் பணிகளில் ஈடுபட்டிருந்த நிலையில் அவருக்கு தொற்று ஏற்பட்டது. பின்னர் சிகிச்சை பலனளிக்காமல் அவர் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
Samayam Tamil அமைச்சர் காமராஜ்
அமைச்சர் காமராஜ்


அதன் தொடர்ச்சியாக முன்னாள் அமைச்சர் வளர்மதி, அமைச்சர்கள் கே.பி.அன்பழகன், தங்கமணி, செல்லூர் ராஜூ, நிலோபர் கபில் என அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் என பலருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டு குணமடைந்தனர்.

இந்த சூழலில், உணவுத்துறை அமைச்சர் காமராஜ் கொரோனா தொற்று காரணமாக கடந்த 7ஆம் தேதியன்று, சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து, வேறு சில நோய்கள் காரணமாக உடல் நிலை மோசமான அமைச்சர் காமராஜ், சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

இந்த நிலையில், அவரது உடல்நிலை மேலும் மோசமான காரணத்தால் ராஜீவ் காந்தி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்ட அவருக்கு, வெண்டிலேட்டர் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், ராஜீவ் காந்தி மருத்துவமனையில் இருந்து திடீரென சென்னை அரும்பாக்கத்தில் உள்ள எம்.ஜி.எம். மருத்துவமனைக்கு அமைச்சர் காமராஜ் மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், அவரது உடல்நிலை குறித்து விசாரிக்க தமிழக முதல்வர் பழனிசாமி மருத்துவமனைக்கு செல்லவுள்ளார்.

சசிகலா விடுதலை உறுதியானது: அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு!

முன்னதாக, தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ள அமைச்சர் காமராஜ், விரைந்து முழு நலன் பெற விழைகிறேன் என்று தெரிவித்த ஸ்டாலின், பொது வாழ்வில் உள்ளவர்கள் தங்கள் உடல்நிலை பாதுகாப்பில் கூடுதல் கவனம் செலுத்திட வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அடுத்த செய்தி