ஆப்நகரம்

100 சதவீதம் போட்டாச்சு: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்!

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 100 சதவீதம் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 17 Jan 2022, 12:48 pm
தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த அனைத்து சிறார்களுக்கும் கொரோனா முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
Samayam Tamil ma subramanian


நாடு முழுவதும் 15 முதல் 18 வயது வரையிலான சிறார்களுக்கு ஜனவரி 3ஆம் தேதி முதல் தடுப்பூசி போடப்பட்டு வருகின்றது.

தமிழ்நாட்டில் பள்ளிகளிலேயே கொரோனா தடுப்பூசி முகாம்கள் ஏற்படுத்தி அனைத்து மாணவர்களுக்கும் தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்றன.
ரேஷன் அட்டைதாரர்களுக்கு குட் நியூஸ்: தமிழக அரசு அறிவிப்பு!
தமிழ்நாட்டில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் அனைத்து கல்லூரிகளுக்கும் ஜனவரி 31ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டது. பள்ளிகளில் 1 முதல் 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டது.

நேற்று தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பில் மாணவர்களின் நலன் கருதி வரும் ஜனவரி 31ஆம் தேதி வரை 10, 11 மற்றும் 12 உள்ளிட்ட அனைத்து வகுப்புகளுக்கும் விடுமுறை அளிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் ஜனவரி 19ஆம் தேதி முதல் 10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கு நடக்கவிருந்த தேர்வுகளும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.

பள்ளிகள் மூடப்பட்டுள்ள நிலையில் அரசுப் பள்ளிகளில் 100 சதவீதம் தடுப்பூசி செலுத்தப்படுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
வெளிநாடு பறக்கும் செல்லூர் ராஜு.. ஓ இது தான் காரணமா?
அமைச்சர் மா. சுப்பிரமணியன் இன்று செய்தியாளர்களிடம் பேசும் போது, “தமிழகத்தில் அரசுப் பள்ளிகளை சேர்ந்த அனைத்து சிறார்களுக்கும் முதல் தவணை செலுத்தப்பட்டுள்ளன. தனியார் பள்ளிகளில் 76 சதவீதம் சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளன.

மேலும், தமிழகத்தில் கடந்த 2 நாள்களாக கொரோனா பாதிப்பு குறைவாகவே பதிவாகி வருகின்றன. இருப்பினும், பொங்கல் விடுமுறை முடிந்துள்ளதால் பாதிப்பு மீண்டும் அதிகரிக்க வாய்ப்புள்ளது” என தெரிவித்தார்.

அடுத்த செய்தி