ஆப்நகரம்

சிகரெட்டை தூக்கிப் போட்டு பிடித்தவரெல்லாம் ஜெயலலிதா இடத்தை நிரப்ப முடியாது; ரஜினியை கலாய்க்கும் அதிமுக...

நடிகர் ரஜினி சினிமாவில் சிகரெட்டை தூக்கிப் போட்டு பிடித்ததையெல்லாம் தமிழக மக்கள் கணக்கில் எடுத்துக்கொள்ள மாட்டார்கள் என அமைச்சர் ஓ.எஸ். மணியன் பேசியுள்ளார்.

Samayam Tamil 18 Nov 2019, 4:43 pm
கட்சி தொடங்காத ரஜினிகாந்த் தொடர்ந்து அரசியல் அரசியலை தீயாக பேசி வருகிறார். இந்த நிலையில் தமிழ் நாட்டிற்கு முதலமைச்சராக வருவேன் என்று எடப்பாடி பழனிசாமி இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கனவில் கூட நினைத்து பார்த்து இருக்க மாட்டார் என அவர் பேசியதற்கு அதிமுகவில் கடுமையான விமர்சனங்கள் எழுகின்றன.
Samayam Tamil சிகரெட்டை தூக்கிப் போட்டு பிடித்தவரெல்லாம் ஜெயலலிதா இடத்தை நிரப்ப முடியாது


இந்நிலையில் மயிலாடுதுறையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய கைத்தறி துறை அமைச்சர் ஓ.எஸ். மணியன் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா இடத்தை யாராலும் தொட்டுக் கூட பார்க்கமுடியாது. சிகரெட்டை தூக்கிப் போட்டு பிடித்தவர்களை எல்லாம் மக்கள் கணக்காக எடுத்துக்கொள்ள மாட்டார்கள் என ரஜினிக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

உள்ளாட்சித் தேர்தல் தேதியை வெளியிட நாள் குறிச்சாச்சு!

மக்களின் ஆதரவை நம்பி அரசியல் வருகையை அறிவித்த ரஜினி தற்போது அதிசயத்தை நம்பி இருப்பதாகவே அவர் எடப்பாடியை விமர்சனம் செய்தததில் தெரிகிறது. தமிழக அரசு தலைமையிடத்தில் வெற்றிடம் இருப்பதாக கூறிய ரஜினி தற்போது முதலமைச்சர் எடப்பாடியை நேரடியாக தாக்கி பேசியுள்ளார்.

உள்ளாட்சி தேர்தலின் தேதியானது டிசம்பர் 2 க்குள் அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதனால் அரசியல் கட்சிகள் தேர்தலுக்கான வேலையை மும்மரமாக செய்து வருகின்றன. அதே வேளையில் கட்சி தொடங்காத ரஜினி அரசியல் விமர்சனங்களை பேசி வருவதால் மிக விரைவில் அரசியல் கட்சியை தொடங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது

தென்பெண்ணை விவகாரம்: தமிழக அரசை கண்டித்து 21 ஆம் தேதி திமுக ஆர்ப்பாட்டம்...

இருப்பினும் ரஜினியின் அரசியல் வருகையை இதுவரை பெரிதாக கண்டுகொள்ளாத அதிமுக, அவரது கருத்தை கடுமையாக விமர்சித்து வருகிறது.

அடுத்த செய்தி