ஆப்நகரம்

விக்கிரவாண்டியில் அமைச்சர் வேலுமணி ஒயிலாட்டம் ஆடி வாக்கு சேகரிப்பு!!

விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தலில் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி ஒயிலாட்டம் ஆடி வாக்கு சேகரித்தார்.

Samayam Tamil 18 Oct 2019, 3:12 pm
தமிழகத்தில் விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி தொகுதிகளில் சட்டமன்ற இடைத்தேர்தல் வரும் 21ஆம் தேதி நடக்கிறது. வாக்கு முடிவுகள் 23ஆம் தேதி வெளியிடப்படுகிறது.
Samayam Tamil SP velumani


விக்கிரவாண்டியில் அதிமுக, திமுக நேருக்கு நேர் களம் காணுகின்றன. நாங்குநேரியில் அதிமுகவும், திமுக கூட்டணியில் காங்கிரசும் களம் காணுகின்றன. இதை முன்னிட்டு அரசியல் கட்சித் தலைவர்கள் இந்த இரண்டு தொகுதிகளிலும் மும்முரமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

வழக்கம்போல தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலினும் ஒருவருக்கொருவர் விமர்சனங்கள் வைத்து வருகின்றனர். திமுக போட்ட வழக்குகளால்தான் முதல்வர் ஜெயலலிதா மரணம் அடைந்தார் என்று எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். அரசின் குறைகளை ஸ்டாலின் கூறி வாக்கு சேகரித்து வருகிறார்.

அரசியலைவிட்டு நிரந்தரமாக விலகத் துடிக்கிறாரா ஸ்டாலின்..?

''ஐ.எஸ்.ஐ முத்திரை பெற்ற ஆட்சி என்று சொல்லிக் கொள்ளும் எடப்பாடி பழனிசாமியின் அரசு, ஊழல் செய்வதில், லஞ்சம் வாங்குவதில், பாஜக அரசுக்கு அடிமையாக இருப்பதில்தான் ஐ.எஸ்.ஐ. முத்திரை பெற்றுள்ளது என்று நாங்குநேரி தொகுதிக்கான தேர்தல் பிரச்சாரத்தில் ஸ்டாலின் தெரிவித்து இருந்தார்.

அதிமுக அமைச்சர்களும் இந்த இரண்டு தொகுதிகளிலும் சூறாவளியாக சுற்றி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த இரண்டு தொகுதிகளின் வெற்றி அதிமுகவுக்கு முக்கியம் இல்லை. ஆனாலும், வரும் 2021ஆம் ஆண்டு தேர்தலுக்கு உத்வேகத்தைக் கொடுக்கும், கட்சி தொண்டர்களுக்கு உத்வேகத்தைக் கொடுக்கும். மேலும், முதல்வருக்கு வைக்கப்பட்ட சவாலாக கருதப்படுகிறது.

ஓட்டுக்கு பணமா கொடுக்கிறீங்க? திமுக எம்.எல்.ஏ உட்பட 7 பேர் மீது பாய்ந்தது வழக்கு!

இந்த நிலையில், அமைச்சர் எஸ்.பி. வேலுமணி விக்கிரவாண்டி தொகுதியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது திடீரென ஒயிலாட்டம் ஆடி தொண்டர்களை மகிழ்வித்தார். தொண்டர்களும் அவருடன் நடனம் ஆடினர். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
தல- தளபதி சண்டை போட்டு மண்டைய போடப்போறாங்க: சொன்னது வேறயாருமில்ல நம்ம சீமான்தான்!

அடுத்த செய்தி