ஆப்நகரம்

நெகிழி தடையை மீறினால் ரூ. 1 லட்சம் வரை அபராதம்- மசோதா தாக்கல்

சென்னை: நெகிழி பொருட்கள் தடையை மீறினால் அபராதம் விதிப்பதற்கு வழி வகை செய்யும் மசோதா சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது.

Samayam Tamil 13 Feb 2019, 1:19 pm
மூன்று முறை அபராதம் விதித்த பிறகும் தடை செய்யப்பட்ட நெகிழியினால் தயாரிக்கப்பட்ட பொருட்களை பயன்படுத்தினால் ரூ. 1 லட்சம் வரை அபராதம் விதிக்க வழிவகை செய்யும் மசோதா சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது.
Samayam Tamil நெகிழி தடை: ரூ. 100 முதல் ரூ. 1 லட்சம் வரை அபராதம்


நெகிழித் தடையை மீறி நடப்பவர்களுக்கு அபராதம் மற்றும் தண்டனை வழங்க வழிவகை செய்யும் மசோதாவை உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்துள்ளார்.

அதன்படி சிறு வணிக விற்பனையாளர்கள் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தினால் அல்லது விற்பனை செய்தால், முதல் தடவைக்கு ரூ. 100 , 2வது முறைக்கு ரூ. 200 , மூன்றாவது முறையாக ரூ. 500 அபராதம் வசூலிக்கப்படும் என சட்டமுன் வடிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதை தொடர்ந்து நடுத்தர வணிக நிறுவனங்களான மளிகைக் கடைகள், மருத்துக் கடைகள் போன்றவை, தூக்கி வீசப்பட்ட பிளாஸ்டிக்கை பயன்படுத்துதல் மற்றும் பகிர்ந்தளித்தல் போன்ற குற்றத்துக்கு, முதல் தடவை என்றால் ரூ. 1000 , 2வது தடவை என்றால் ரூ. 2000 மற்றும் 3வது முறை என்றால் ரூ. 5000 அபராதமாக விதிக்கப்படும்.

வணிக வளாகங்கள், துணிக்கடைகள் மற்றும் பல்பொருள் அங்காடிகள் போன்ற மிகப்பெரிய வணிக நிறுவனங்களில் பயன்படுத்தப்பட்ட மற்றும் தூக்கி வீசப்பட்ட பிளாஸ்டிக்கை பயன்படுத்துதல் மற்றும் பகிர்ந்தளித்தல் போன்றவற்றை செய்தால் முதல் தடவை குற்றத்திற்கு ரூ. 10 ஆயிரம், 2வது தடை என்றால் ரூ. 15 ஆயிரம், 3வது தடவை என்றால் ரூ. 5 ஆயிரம் அபராதமாக வசூலிக்கப்படும்.

பயன்படுத்தப்பட்ட மற்றும் தூக்கிவீசப்பட்ட பிளாஸ்டிக்கை சேமித்தல், வழங்குதல், கொண்டு செல்லுதல் மற்றும் விற்பனை செய்தல் மற்றும் பகிர்ந்தளித்தல் போன்ற குற்றத்துக்கு முதல் தடவை ரூ. 25 ஆயிரம், இரண்டாம் தடவை ரூ. 50 ஆயிரம் , மூன்றாம் தடவை ரூ.1 லட்சம் அபராதமாக விதிக்கப்படும் என சட்டமுன் வடிவில் குறிப்பிடப்பட்டுள்ளது. .

அடுத்த செய்தி