ஆப்நகரம்

சென்னையில் மின்தடை ஏன்? அமைச்சர் தங்கமணி விளக்கம்

சென்னையின் பெரும்பாலான பகுதிகளில் மின்வெட்டு ஏற்பட்டுள்ள நிலையில், மின்வெட்டு ஏற்பட்டதற்கான காரணம் குறித்து மின்துறை அமைச்சர் தங்கமணி விளக்கம் அளித்துள்ளார்.

TNN 27 Apr 2017, 1:06 am
சென்னை: சென்னையின் பெரும்பாலான பகுதிகளில் மின்வெட்டு ஏற்பட்டுள்ள நிலையில், மின்வெட்டு ஏற்பட்டதற்கான காரணம் குறித்து மின்துறை அமைச்சர் தங்கமணி விளக்கம் அளித்துள்ளார்.
Samayam Tamil minister thangamani explains abouut power cut in chennai
சென்னையில் மின்தடை ஏன்? அமைச்சர் தங்கமணி விளக்கம்


தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயில் சுட்டெரித்து வரும் நிலையில், பகல் நேரங்களில் மக்கள் வெளியே செல்ல முடியாமல் தவித்து வருகின்றன. தலைநகர் சென்னையை பொறுத்தவரை, வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ள நிலையில், நகரத்தின் பல்வேறு பகுதிகளில் தற்போது மின் வெட்டு ஏற்பட்டுள்ளது.

நுங்கம்பாக்கம், மயிலாப்பூர், புரசைவாக்கம், பெரம்பூர், தி.நகர், ராயப்பேட்டை, திருவல்லிக்கேணி, வில்லிவாக்கம்., அண்ணா நகர், நந்தனம் உள்ளிட்ட பல பகுதிகளில் சுமார் ஒரு மணிநேரத்துக்கும் மேலாக மின் வெட்டு நீடித்து வருவதால், கடுமையான வெட்கை மற்றும் கொசுக்கடியால் தூங்க முடியாமல் பொதுமக்கள் பெரும் அவதிகுள்ளாகியுள்ளனர்.

சென்னை மாநகரம் முழுவதும் சுமார் 70 சதவீத பகுதிகளில் மின்சாரம் இல்லை எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில், மின்வெட்டு ஏற்பட்டதற்கான காரணம் குறித்து, சென்னை அண்ணா சாலையிலுள்ள தலைமை அலுவலகத்தில் மின்துறை அமைச்சர் தங்கமணி ஆய்வு மேற்கொண்டார்.

அதன்பின்னர், மணலி - மயிலாப்பூர் இடையிலான உயர் மின் அழுத்த பாதையில் பழுது காரணமாக சென்னையில் பெரும்பாலான இடங்களில் மின் தடை ஏற்பட்டுள்ளது. பழுதை சீர் செய்யும் பணி துரிதமாக நடைபெறுகிறது. விரைவில் மின்சாரம் வழங்கப்படும் என அமைச்சர் தங்கமணி விளக்கம் அளித்தார்.

மேலும், மின் தடை காரணமாக மருத்துவமனைகளில் நோயாளிகள் பாதிக்கப்படாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
Minister Thangamani explains abouut power cut in chennai

அடுத்த செய்தி