ஆப்நகரம்

ஜெ.சிலை சர்ச்சை: சிற்பி மீது பழிபோடும் அமைச்சர்

ஜெயலலிதாவின் சிலை குறித்து எழுந்துள்ள சர்ச்சைக்கு அதனைச் செதுக்கியவரின் தவறே காரணம் என்று அமைச்சர் தங்கமணி பழிசுமத்தியுள்ளார்.

Samayam Tamil 27 Feb 2018, 3:37 pm
ஜெயலலிதாவின் சிலை குறித்து எழுந்துள்ள சர்ச்சைக்கு அதனைச் செதுக்கியவரின் தவறே காரணம் என்று அமைச்சர் தங்கமணி பழிசுமத்தியுள்ளார்.
Samayam Tamil minister thangamani replies on jayalalithaa statue issue
ஜெ.சிலை சர்ச்சை: சிற்பி மீது பழிபோடும் அமைச்சர்


அதிமுகவின் பொதுச்செயலாளரும் முன்னாள் முதல்வருமான ஜெயலலிதா கடந்த 2016ஆம் ஆண்டு டிசம்பர் 5ஆம் தேதி காலமானார். சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றவாளி என்று உச்சநீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்ட இவரது உருவப்படம் அண்மையில் தமிழகச் சட்டப்பேரவையில் வைக்கப்பட்டது. இதற்கு கடும் கண்டனம் எழுந்தது.

இந்நிலையில், பிப்ரவரி 24ஆம் தேதி அவரது 70வது பிறந்தநாளை முன்னிட்டு ராயப்பேட்டையில் உள்ள அதிமுகவின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற கொண்டாட்டத்தில் ஜெயலலிதாவின் வெண்கலச் சிலையை முதல்வர் எடப்பாடியும் துணை முதல்வர் பன்னீரும் திறந்துவைத்தனர். இந்தச் சிலை ஹைதராபாத்தில் செய்து கொண்டுவரப்பட்டது.

அதிமுக அலுவலகத்தில் நிறுவப்பட்ட அவரது வெண்கல சிலை அவரைப் போல இல்லை என்று சமூக வலைத்தளங்களில் சர்ச்சை எழுந்தது. உடனே, ஜெ., சிலையை விமர்சிப்பவர்கள் மனசாட்சி இல்லாத மிருகங்கள் என்று அமைச்சர் ஜெயக்குமார் சீறினார். பின், சிலை சரிசெய்யப்படும் என்றார். மக்களவை துணை சபாநாயகர் தனபாலும் சிலை சரிசெய்யப்படும் என்று உறுதியளித்தார்.

இந்நிலையில், தருமபுரியில் ஜெயலலிதா பிறந்தநாள் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி சிலையை வடிவமைத்தவர் தவறு செய்துவிட்டார் என்றும் அதனை மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.

இதனிடையே, சிலையை வடிவமைத்த சிற்பி சிவ வரப்பிரசாத் இந்த சர்ச்சையினால் மிகவும் வருத்தமடைந்துள்ளதாகவும் சிலையை சரிசெய்யத் தயாராக இருப்பதாகவும் கூறியுள்ளார்.

அடுத்த செய்தி