ஆப்நகரம்

உலக அளவிலேயே தமிழ்நாட்டில் தான் இது கம்மி: அமைச்சர் பெருமிதம்!!

கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளாகி இறப்போர் எண்ணிக்கை, உலக அளவிலேயே தமிழகத்தில் தான் குறைவாக உள்ளது என்று தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 14 May 2020, 7:43 pm
தமிழகத்தில் கடந்த 10 நாட்களாக நாள்தோறும் 500 -க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா நோய்த்தொற்று கண்டறியப்பட்டு வந்தது. இந்த நிலையில், சற்று ஆறுதலாக இன்று 447 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
Samayam Tamil minister


இதுதொடர்பாக இன்று, கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளோர், குணமடைந்தோர் உள்ளிட்டவை குறித்து சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மேலும் கூறியது:

தமிழகத்தில் இன்று புதிதாக 447 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் சென்னையில் மட்டும் 363 பேருக்கு நோய்தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

கொரோனா: அவ்வளவு ஈஸியா தமிழ்நாட்டுக்குள் வர முடியாது!

இதையடுத்து கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளோர் எண்ணிக்கை 9,674 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் மொத்தம் 2,240 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில், தற்போது 7,365 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்..

வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு தமிழகத்தில் தான் கொரோனா பரிசோதனைக்காக, 58 ஆய்வகங்கள் உள்ளன. இவற்றின் மூலம் இன்று மட்டும் 11,965 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.

இதுவரை மொத்தம் 2.91 லட்சம் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இது இந்திய அளலில் 15 சதவீதமாகும்.

அவங்க மேல பழி போடறதை நிறுத்துங்க: முதல்வருக்கு ஸ்டாலின் வேண்டுகோள்!!

பரிசோதனைகள் அதிகம் செய்யப்படுவதால், நோய்த்தொற்று கண்டறியப்படுவோரின் எண்ணிக்கையும் அதிகமாக உள்ளது. இந்த எண்ணிக்கையை கண்டு மக்கள் அச்சமடைய தேவையில்லை.

நம்மிடம் சிறப்பான மருத்துவ கட்டமைப்பு, சிகிச்சை வசதிகள் உள்ளதால் கொரோனா இறப்பு விகிதம் ஒரு சதவீதத்துக்கும் கீழாக, 0.67 சதவீதமாக உள்ளது. இந்த எண்ணிக்கை பிற மாநிலங்களைலிட, இன்னும் சொல்லப்போனால் உலகின் பிற எந்த நாட்டை ஒப்பிடும்போதும் குறைவு.

கொரோனா வைரஸ் தான் நமக்கு எதிரியே தவிர, கொரோன தொற்றுக்கு ஆளானவர்கள் நமக்கு எதிரிகள் அல்ல என்பதை நாம் அனைவரும் உணர்ந்து செயல்பட வேண்டும்.

கொரோனா வைரஸ் பரவல் தடுப்புக்கான அரசின் நடவடிக்கைகளுக்கு சமூகம் மற்றும் பொதுமக்களின் பங்களிப்பு இருந்தால்,, கொரோனாவுக்கு எதிரான போரில் நாம் எளிதில் வெற்றி பெறலாம் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் உறுதிப்பட கூறினார்.

சென்னையில் இன்று 2 நபர்கள் உள்பட, தமிழகத்தில் இதுவரை மொத்தம் 66 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.

அடுத்த செய்தி