ஆப்நகரம்

வெளியிட்ட கணக்கில் 10 சதவீதம் பேர்தான் கொரோனா சாவு- விஜயபாஸ்கர்

கொரோனா தொற்று காரணமாகக் கொத்து கொத்தாக உயிர்கள் பறிபோகின்றன என்ற பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்பட்டு வரும் நேரத்தில் சுகாதாரத் துறை அமைச்சர் புது தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்...

Samayam Tamil 16 Aug 2020, 10:36 pm
கொரோனா பாதிப்பு காரணமாக நேரடியாக உயிரிழந்தவர்கள் 10 சதவீதம் பேர் மட்டுமே என்றும், மக்கள் இந்த வைரசைக் கண்டு அச்சப்பட வேண்டாம் என்றும் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.
Samayam Tamil வெளியிட்ட கணக்கில் 10 சதவீதம் பேர்தான் கொரோனா சாவு- விஜயபாஸ்கர்
வெளியிட்ட கணக்கில் 10 சதவீதம் பேர்தான் கொரோனா சாவு- விஜயபாஸ்கர்


புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு நடத்திய அமைச்சர் விஜயபாஸ்கர், அதன்பின் நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது விஜயபாஸ்கர் கூறியதாவது:
வளர்ந்த நாடுகளை விடத் தமிழ்நாட்டில் கொரோனவுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்கப்படுகிறது.

கொரோனா தொற்று உயிரிழப்பு என வெளியாகும் தரவுகளில், 10 சதவீதம் மட்டுமே நேரடியாக வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்கள். இந்த இறப்பு எண்ணிக்கையைப் பார்த்து மக்கள் பீதி அடைய வேண்டாம். 90 சதவீதம் பேர் வெவ்வேறு நோய்களைக் கொண்டவர்கள்.

குறிப்பிடப்பட்டவர்கள் உயிரிழப்பையும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தின் வழிக்காட்டுதல்படி, கொரோனா உயிரிழப்பு பட்டியலில் சேர்க்கிறோம். அறிகுறிகள் தென்பட்டால் ஆரம்பக் கட்டத்திலே அரசு மருத்துவமனைகளை அணுகி பரிசோதனை செய்து கொள்ளவும். ஆரம்ப கட்டத்தில் கண்டறிந்தால் எளிதாக மருத்துவர்கள் குணப்படுத்தி விடுவார்கள்.

சண்டே ஹேப்பி: கொரோனா பாதிக்கப்பட்ட 6,019 பேர் ஒரே நாளில் டிஸ்சார்ஜ்

அதேபோல் நோயிலிருந்து குணமடைந்த பின்னும், சம்பந்தப்பட்டவர்களின் ஆரோக்கியம் சார்ந்து தொடர்ந்து ஆலோசனை வழங்கத் தனியாக மருத்துவப் பிரிவு ஒன்றைத் தொடங்க பணிகள் செய்து வருகிறோம். விரைவில் அது தொடங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

அமைச்சர் அளித்த இந்த பேட்டியின்போது சுகாதாரத் துறை முதன்மைச் செயலர் ராதாகிருஷ்ணனும் உடனிருந்தார்.

இதற்கிடையே கிருஷ்ணகிரி, அரசு தலைமை மருத்துவமனை பணியாளர் பாஸ்கர் என்பவர் நோயாளிகளைச் சிரமப்படச் செய்தார் என சமூக வலைதளத்தில் வெளியான வீடியோவின் அடிப்படையில் குற்றம்சாட்டப்பட்டவரை பணியிடை நீக்கம் செய்ய அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவுறுத்தியிருந்தார். அதன்படி கிருஷ்ணகிரி மாவட்ட சுகாதாரத் துறை, குற்றம் சாட்டப்பட்ட பாஸ்கரை பணியிடை நீக்கம் செய்து, துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுத்துள்ளது.

அடுத்த செய்தி