ஆப்நகரம்

ஸ்டாலினுக்கு எப்படி பதவிகள் கிடைத்தன - தைரியமிருந்தால் பதில் சொல்லட்டும் அழகிரி சவால்

முக ஸ்டாலினுக்கு துணை முதல்வர் மற்றும் கட்சியின் பொருளாளர் பதவி எப்படி கிடைத்தன என கூற முடியுமா முக அழகிரி சவால் விடுத்துள்ளார்.

Samayam Tamil 8 Sep 2018, 2:06 pm
மதுரை: முக ஸ்டாலினுக்கு துணை முதல்வர் மற்றும் கட்சியின் பொருளாளர் பதவி எப்படி கிடைத்தன என கூற முடியுமா முக அழகிரி சவால் விடுத்துள்ளார்.
Samayam Tamil MK stalin-alagiri


திமுக.,வுக்கும், ஸ்டாலினுக்கும் தனது பலத்தை நிரூபிக்கும் விதமாக முக அழகிரி கடந்த 5ம் தேதி பேரணியை நடத்தினார். அதில் லட்சக்கணக்கானோர் கலந்து கொள்வார்கள் என தெரிவித்திருந்தார். ஆனால் உண்மையில் ஆயிரக்கணக்கானோர் தான் கலந்துகொண்டனர்.

அழகிரி சவால் :
இதுகுறித்து முக அழகிரி பத்திரிக்கை ஒன்றிற்கு பேட்டி அளித்ததில், “பொதுக்குழுவே ஜனநாயக வழிமுறைகளுக்கு எதிராக தான் ஏற்படுத்தப்பட்டுள்ளது. எனது குற்றச்சாட்டே ஜனநாயக முறையில் பொதுக்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட வேண்டும் என்பது தான். இந்த விவகாரத்தையும், மற்ற கட்சி விவகாரத்தையும் என் தந்தை கருணாநிதியிடம் கேள்வி எழுப்பினேன்.” என்றார்.



ஸ்டாலின் தலைமை:
என்னை திமுக.,வில் இணைத்துக் கொண்டால் ஸ்டாலினின் தலைமையை ஏற்பதாக தெரிவித்தேன். ஆனால் ஊடகங்களில் நான் ஸ்டாலினின் தலைமையை ஏற்க தயார் என தவறாக செய்தியை திரித்து கூறிவிட்டனர்.

என்னை திமுக.,வில் இணைத்துக் கொள்ளாவிட்டால், நான் எப்படி ஸ்டாலினின் தலைமையை ஏற்பது. என்னை கட்சியில் இணைத்துக் கொள்வது தான் திமுக.,வுக்கு நல்லது. இல்லையே தேர்தல் தோல்விகள் தான் சந்திக்க நேர்டும். என்னை நீக்கிய பின்னர் திமுக தொடர் தோல்விகளை சந்தித்து வருகின்றது.


ஸ்டாலினுக்கு சவால்:ஸ்டாலினுக்கு கட்சி பொருளாளர், துணை முதல்வர் பதவி எப்படி கிடைத்தது என மனசாட்சியுடன் வெளியே கூற முடியுமா என அழகிரி சவால் விடுத்துள்ளார்.

அடுத்த செய்தி