ஆப்நகரம்

கைகுலுக்கி நலம் விசாரித்த ஸ்டாலின் - திவாகரன்!

தஞ்சாவூரில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சி ஒன்றில் ஸ்டாலினும் திவாகரனும் கைகுலுக்கி நலம் விசாரித்துக் கொண்டனர்.

Samayam Tamil 2 Jul 2018, 9:18 pm
தஞ்சாவூரில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சி ஒன்றில் ஸ்டாலினும் திவாகரனும் கைகுலுக்கி நலம் விசாரித்துக் கொண்டனர்.
Samayam Tamil stalin divakaran met


திமுக எம்எல்ஏ அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் இல்லத் திருமணவிழா தஞ்சாவூரில் நடைபெற்றது. இவ்விழாவில் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கலந்து கொண்டு தலைமை தாங்கினார். பின்னர், மேடையில் மைக்கில் பேசிய அவர், அதிமுக அரசை கடுமையாக விமர்சித்தார். இதே வேளையில் தினகரன் அணியிலிருந்து வெளியேறிய திவாகரன் மேடைக்கு கீழே அமர்ந்து இருந்து ஸ்டாலின் பேசியதை கவனித்தார்.

பின்னர், மேடையில் இருந்து இறங்கிய ஸ்டாலின் நேராக திவாகரன் இருந்த இடத்துக்கு வந்தார். ஸ்டாலின் தன்னை நோக்கி வந்ததைக் கண்ட திவாகரன், எழுந்து நின்று மரியாதை செலுத்தினார். அப்போது இருவரும் கைகுலுக்கி நலம் விசாரித்துக் கொண்டனர். ஸ்டாலினும் திவாகரனும் சந்தித்து கைகுலுக்கிய இந்த சம்பவம் திருமண மண்டபத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அடுத்த செய்தி