ஆப்நகரம்

அப்பா, சித்தப்பா இருவருமே திறமைசாலிகள்: தயாநிதி அழகிரி

சமீபத்தில் எஃப் ஒன்றுக்கு பேட்டியளித்த தயாநிதி அழகிரி, தனது அப்பா, சித்தப்பா இருவருமே திறமைசாலிகள் என தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 2 Sep 2018, 3:43 pm
சமீபத்தில் எஃப் ஒன்றுக்கு பேட்டியளித்த தயாநிதி அழகிரி, தனது அப்பா, சித்தப்பா இருவருமே திறமைசாலிகள் என தெரிவித்துள்ளார்.
Samayam Tamil அப்பா, சித்தப்பா இருவருமே திறமைசாலிகள்: தயாநிதி அழகிரி
அப்பா, சித்தப்பா இருவருமே திறமைசாலிகள்: தயாநிதி அழகிரி


திமுக கட்சியின் தலைவரான மு.கருணாநிதி, கடந்த மாதம் காவிரி மருத்துவமனையில் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து, சமீபத்தில் நடைபெற்ற திமுக பொதுக்குழுக் கூட்டத்தில் புதிய தலைவராக மு.க.ஸ்டாலினும், பொருளாளராக துரைமுருகனும் தேர்வுச் செய்யப்பட்டனர்.

இதனிடையே, கட்சியிலிருந்து நீக்கப்பட்ட கருணாநிதியின் மகன் மு.அழகிரி, தன்னைக் கட்சியில் சேர்த்துக்கொள்ளும்படி கூறினார். இல்லையென்றால், அதற்கான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என தெரிவித்தார். சமீபத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த மு.க.அழகிரி, தன்னை திமுகவில் இணைத்துக் கொள்ளும் பட்சத்தில் மு.க.ஸ்டாலினைத் தலைவராக ஏற்றுக் கொள்ளத் தயார் எனவும் தெரிவித்தார்.

இந்நிலையில், எஃப்எம் ஒன்றிற்கு பேட்டியளித்த மு.க.அழகிரியின் மகன் தயாநிதி அழகிரி, “கருணாநிதி உயிரோடு இருந்தபோது, கட்சியில் சேர்த்துக்கொள்ளும்படி அவரிடம் மட்டுமே எனது தந்தை பேசினார். ஒரு தொண்டனாக இருந்து, திமுக ஆட்சியில் அமர உதவுவதே எங்கள் ஆசை” எனத் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், சித்தப்பாவிடம் (மு.க.ஸ்டாலின்) இருந்து சாதகமான பதில்கள் வரும் என நம்புவதாகவும், அப்பா, சித்தப்பா இருவருமே திறமைசாலிகள் தான் எனவும் தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி