ஆப்நகரம்

திமுக எம்எல்ஏ-க்களுக்கு ஸ்டாலின் அழைப்பு: இன்று காலை ஆலோசனை கூட்டம்

திமுக எம்எல்ஏ-க்களுக்கு ஸ்டாலின் அழைப்பு விடுத்திருந்த நிலையில், இன்று காலை அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது.

TNN 16 May 2017, 8:55 am
சென்னை: திமுக எம்எல்ஏ-க்களுக்கு ஸ்டாலின் அழைப்பு விடுத்திருந்த நிலையில், இன்று காலை அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது.
Samayam Tamil mk stalin calls dmk mlas meeting will be held today in anna arivalayam
திமுக எம்எல்ஏ-க்களுக்கு ஸ்டாலின் அழைப்பு: இன்று காலை ஆலோசனை கூட்டம்


பரபரப்பான அரசியல் சூழலுக்கிடையே, திமுக எம்எல்ஏ-க்கள் அனைவரும் இன்று சென்னை வர வேண்டும் என அக்கட்சியின் செயல் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான ஸ்டாலின் அழைப்பு விடுத்திருந்தார்.

அதேசமயம், சட்டப்பேரவைக் கூட்டத்தை உடனடியாக கூட்ட வேண்டும் என கோரி, ஆளுநர் வித்யாசாகர் ராவுக்கு கடிதம் ஒன்றையும் ஸ்டாலின் எழுதியிருந்தார். இந்நிலையில், திமுக எம்எல்ஏ-க்களின் கூட்டம் அக்கட்சியின் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் இன்று காலை நடைபெறவுள்ளது.

இந்த கூட்டத்தில் சட்டப்பேரவையை உடனடியாக கூட்டுவதற்கான தீர்மானம் நிறைவேற்றப்படும் என தெரிகிறது. மேலும், போக்குவரத்து ஊழியர்களின் வேலைநிறுத்தம் உள்ளிட்ட தமிழகத்தில் நிலவும் பல்வேறு பிரச்னைகள் குறித்தும் விவாதிக்கப்படும் எனவும் தெரிகிறது.
MK Stalin calls DMK MLA's: Meeting will be held today in Anna Arivalayam

அடுத்த செய்தி