ஆப்நகரம்

உழைப்புக்குரிய தொகையை உடனே வழங்கிடுக: பாஜகவுக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!

மகாத்மா காந்தியின் 150வது பிறந்தநாளைக் கொண்டாடிவிட்டு, அவர் பெயரிலான மக்கள்நலத் திட்டத்தைப் புறக்கணிப்பது ஏற்புடையதன்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்

Samayam Tamil 25 Nov 2019, 7:10 pm
சென்னை: மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் பணிகளைச் செய்த தமிழக கிராமப்புற ஏழை மக்களுக்கான ஊதியத்தை உடனடியாக வழங்கிட வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
Samayam Tamil மு.க.ஸ்டாலின்
மு.க.ஸ்டாலின்


மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் குறைந்த பட்ச வேலைவாய்ப்பு உறுதி செய்யப்படுகிறது. இதில் இணையும் பணியாளா்களின் எண்ணிக்கை அடிப்படையில் அந்தத் திட்டத்தின் கீழ் பணிகள் வழங்கப்பட்டு அதற்கான ஊதியம் அவர்களது வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுகிறது.

மறைமுக தேர்தலுக்கு தடை விதிக்க உயர் நீதிமன்ற கிளையில் மனு..!

இந்நிலையில், இத்திட்டத்தின் கீழ் பணியாற்றும் பணியாளர்களுக்கு கடந்த சில மாதங்களாக ஊதியம் தராமல் நிலுவையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், கிராமப்புற மக்களின் உழைப்புக்குரிய தொகையை உடனே வழங்கிட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

41 ஆண்டுகளுக்குப் பின் சந்தித்த தாய், மகன்; சென்னையில் உருக்கம்!!

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், ”மகாத்மா காந்தி பெயரிலான #MNREGA திட்டத்தின்கீழ் பணிகளைச் செய்த தமிழக கிராமப்புற ஏழை மக்களுக்கு கடந்த 2 மாதங்களாக - சில மாவட்டங்களில் 4 மாதங்களாக, அதற்குரிய பணத்தை வங்கிக் கணக்கில் செலுத்தாமல், பயனாளிகளை அலட்சியப்படுத்துவது மக்கள் மீதான பாஜக ஆட்சியின் அலட்சியத்தை காட்டுகிறது.


மகாத்மா காந்தியின் 150வது பிறந்தநாளைக் கொண்டாடிவிட்டு, அவர் பெயரிலான மக்கள்நலத் திட்டத்தைப் புறக்கணிப்பது ஏற்புடையதன்று! கிராமப்புற மக்களின் உழைப்புக்குரிய தொகையை உடனே வழங்கிடுக” என மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.


அதேபோல், காவல்துறையில் தகவல் தொடர்புகளை தமிழில் மேற்கொள்ள உத்தரவிட்டுள்ள காவல்துறைத் தலைவர் ஜே.கே. திரிபாதிக்கு வாழ்த்து தெரிவித்துள்ள மு.க.ஸ்டாலின், அதனை முழுமையாகவும் சிறப்பாகவும் நிறைவேற்றுக எனவும் தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி