ஆப்நகரம்

விஜய பாஸ்கரின் சீட்டைக் கிழக்க வேண்டும்: ஸ்டாலின் வலியுறுத்தல்

வருமானவரித்துறையின் சோதனையில் சிக்கிய தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கரை பதவியிலிருத்து நீக்க வேண்டும் என்று திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

TNN 7 Apr 2017, 1:58 pm
சென்னை: வருமானவரித்துறையின் சோதனையில் சிக்கிய தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கரை பதவியிலிருத்து நீக்க வேண்டும் என்று திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
Samayam Tamil mk stalin demands to expel vijayabaskar from ministry
விஜய பாஸ்கரின் சீட்டைக் கிழக்க வேண்டும்: ஸ்டாலின் வலியுறுத்தல்


சென்னை ஆர்.கே.நகரில் வரும் ஏப்ரல் 12ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அத்தொகுதியில் பணப்பட்டுவாடா நடப்பதாக தொடர் புகார்கள் வந்த வண்ணம் உள்ளன.

இந்நிலையில், இன்று காலை தமிழக அமைச்சர் விஜயபாஸ்கர் இல்லத்தில் வருமானவரித்துறை சோதனையைத் தொடங்கியது. ஆர்.கே.நகரில் பணப்பட்டுவாடா நடத்திருப்பது தொடர்பாகவே சோதனை நடத்தப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதற்காக, துணை ராணுவப்படையினர் அமைச்சர் விஜயபாஸ்கரின் இல்லத்திற்கு வரவழைக்கப்பட்டுள்ளனர்.

சேப்பாக்கம் எம்எல்ஏக்கள் விடுதியில் அமைச்சர் விஜயபாஸ்கர் அறையிலிருந்து ரூ.1.8 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. சென்னை எழும்பூரில் உள்ள தனியார் விடுதி அறை ஒன்றில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. பணப்பட்டுவாடா தொடர்பான கணக்கு வழக்குகள் எழுதப்பட்ட ஆவணங்கள் சிக்கியுள்ளன.

இந்நிலையில், இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவரும் திமுக செயல் தலைவருமான மு.க.ஸ்டாலின், “வருமான வரித்துறை சோதனையால், தமிழகத்திற்கு மிகப்பெரிய தலைகுனிவு நேர்ந்துள்ளது. சோதனையில் சிக்கிய அமைச்சர் விஜயபாஸ்கரை பதவிநீக்கம் செய்ய வேண்டும். இரு அமைச்சர்கள் அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்தது கண்டனத்திற்குரியது.” என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இதற்கு முன்பு நடைபெற்ற சோதனைகள் பற்றிய விபரத்தை மத்திய அரசு தெரிவிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

அடுத்த செய்தி