ஆப்நகரம்

மீண்டும் ஒன்றிணைய அழைக்கும் ஸ்டாலின்: களமாடத் தயாராகும் உடன்பிறப்புகள்!

கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என திமுகவினரை மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.

Samayam Tamil 8 Apr 2021, 2:35 pm
சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு ஏப்ரல் 6ஆம் தேதி நிறைவடைந்த நிலையில் இன்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கட்சியினருக்கு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
Samayam Tamil mk stalin


கட்சியினர் கடந்த சில மாதங்களாக தீவிரமாக தேர்தல் பணிகளில் ஈடுபட்டனர். தேர்தல் நிறைவடைந்த நிலையில் கொரோனா பரவல் அதிகரிப்பு, கோடை வெயில் அதிகரிப்பு ஆகியவை காரண்மாக மக்கள் நலப் பணிகளில் ஈடுபடவேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.

கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகள்: தமிழக அரசு அதிகாரபூர்வ அறிவிப்பு!
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தேர்தல் நேரம் மட்டுமல்ல; எப்போதும் மக்களுடன் இனைந்திருக்கும் பேரியக்கம்தான் தி.மு.கழகம். கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தில் கொரோனா பேரிடரால் தவித்த மக்களுக்கு உதவிடும் வகையில் 'ஒன்றிணைவோம் வா' எனும் செயல்பாட்டின் மூலம், கட்சிப் பாகுபாடின்றி அனைத்துத் தரப்பினருக்கான உணவு - மருத்துவ உதவி - அத்தியாவசியத் தேவைகளை தி.மு.கழகம் நிறைவேற்றியது. கழக உடன்பிறப்புகளான அனைத்து நிர்வாகிகளும் தொண்டர்களும் அதில் பங்கேற்றுத் தொண்டாற்றினர்.

இந்த கோடைகாலத்தில் மக்களின் தாகம் தணிக்க தி.மு.க.வின் சார்பில் தண்ணீர்ப் பந்தல்கள் அமைத்திடுங்கள். கொரோனா இரண்டாவது அலை குறித்து மருத்துவர்களும் மக்கள் நல்வாழ்வுத் துறையும் எச்சரிக்கை செய்திருப்பதால் அதுகுறித்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்துங்கள். மக்களுக்கு கபசுரக் குடிநீர் வழங்குங்கள். வாய்ப்புள்ள இடங்களில் முகக்கவசம், சானிடைசர் வழங்கிடுங்கள்.

சசிகலா விவகாரம்: எடப்பாடியை கட்டிப்போட்ட அந்த நபர்!

தேர்தல் முடிவுகளில் நல்ல தீர்ப்பு நிச்சயம் வரும். எனினும், அதுவரை காத்திருக்காமல் மக்களுக்கான பணியை எப்போதும் போல இப்போதும் தொடர்ந்திட 'ஒன்றிணைவோம் வா'ருங்கள் உடன்பிறப்புகளே” என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

அடுத்த செய்தி