ஆப்நகரம்

நீட் விலக்கு: அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டும் ஸ்டாலின்

நீட் விலக்கு தொடர்பாக ஜனவரி 8ஆம் தேதி சட்டமன்ற அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

Samayam Tamil 6 Jan 2022, 11:59 am
2022ஆம் ஆண்டுக்கான முதல் சட்டமன்ற கூட்டத் தொடர் நேற்று ஆளுநர் உரையுடன் தொடங்கியது. இன்று கேள்வி - பதில் அமர்வில் சட்டமன்ற உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதிலளித்தனர். தமிழக வரலாற்றில் முதன்முறையாக கேள்வி பதில் அமர்வு நேரலையாக ஒளிபரப்பு செய்யப்பட்டது.
Samayam Tamil mk stalin in tn assembly


தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் தமிழக முதல்வர் ஸ்டாலின் ஆற்றிய உரையில் நீட் தேர்வு விலக்கு குறித்து விரிவாகப் பேசினார். 12ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையிலேயே கல்லூரி மாணவர் சேர்க்கை நடைபெற வேண்டும் என்பதில் இந்த அரசு உறுதியாக உள்ளது.

மாநில அரசின் நிதியில், மாநில அரசு அமைத்த மருத்துவக்கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை குறித்த அதிகாரம் ஒன்றிய அரசின் கைகளுக்கு சென்றுவிட்டது. பனிரெண்டு ஆண்டுகள் படித்த பள்ளிக் கல்வியால் எந்த பயனும் இல்லை என்பது போல் நுழைவுத் தேர்வை கொண்டுவருவதாக குற்றம் சாட்டினார்.
பாலுவுக்கு டாட்டா, கனிமொழிக்கு ஹாய்: அமித் ஷா அரசியல் விளையாட்டு!
"நீட் தேர்வு போன்ற நுழைவு தேர்வுகளுக்கு எதிரான நமது இந்த போராட்டத்தையும், நமது சமூக நீதி இயக்கத்தின் அடுத்த கட்ட போராட்டமாக கருதி, நமது கொள்கையிலிருந்து எள் முனையளவு கூட பின்வாங்காமல் முன்னெடுத்துச் செல்வோம்.

மேற்கூறிய இந்த சூழலை கருத்தில் கொண்டு, அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து நாம் ஒருமித்த நிலைப்பாட்டை எடுப்பதற்கு, நமது சட்டமன்றத்தில் இருக்கக்கூடிய அனைத்து கட்சிகளின் கூட்டத்தை நாளை மறுநாள் அதாவது 8 .1 .2022 அன்று கூட்டுவது என்று முடிவு செய்து இருக்கிறோம்.

அந்தக் கூட்டத்தில் நீங்கள் அனைத்து கட்சியினுடைய தலைவர்கள் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். உரிமையோடு கேட்டுக்கொள்கிறேன்.
ஊரடங்கில் புதிய தளர்வு: தமிழக அரசு சற்றுமுன் அறிவிப்பு!
நீங்களும் சேர்ந்து நிறைவேற்றிய இந்த தீர்மானம் தான்.. அதனால் நீங்கள் இதன் முக்கியத்துவத்தை கருதி அனைத்துக் கட்சித் தலைவர்களும் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும்.

அந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின் அடிப்படையில் நீட் தேர்வுக்கு எதிரான, சமூக நீதிக்கான, நமது போராட்டம் தொடரும் என்பதை இந்த மாமன்றத்தில் தெரிவித்து கொள்கிறேன்" இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி