ஆப்நகரம்

தூத்துக்குடியில் போட்டியிட விருப்பமனு அளித்த கனிமொழியிடம் நேர்காணல் நடத்திய ஸ்டாலின்!

மக்களவை தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களுக்கு நேர்காணல் நடைபெற்று வருகிறது.

Samayam Tamil 10 Mar 2019, 1:21 pm
விரைவில் மக்களவை தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான தேதி இன்று மாலை 5 மணியளவில் அறிவிக்கப்படும் என்று இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. முன்னதாக திமுக சார்பில் போட்டியிட விரும்புபவர்கள், தலைமைக் கழகத்தில் விண்ணப்பம் அளித்திருந்தனர்.
Samayam Tamil Kanimozhi


அவர்களுக்கு இன்று காலை முதல் அண்ணா அறிவாலயத்தில் நேர்காணல் நடைபெற்று வருகிறது. விருப்ப மனு அளித்தவர்களிடம் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேர்காணல் நடத்தி கொண்டிருக்கிறார். அதாவது, தொகுதி நிலவரம், வெற்றி வாய்ப்பு குறித்து கேட்டறிந்தார்.

இந்த நேர்காணலின் போது, சம்பந்தப்பட்ட மக்களவை தொகுதிகளைச் சேர்ந்த மாவட்ட செயலாளர்கள், மாவட்ட நிர்வாகிகள், செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய, நகர, பகுதி செயலாளர்கள் மட்டுமே பங்கேற்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருந்தது.

மேலும் வேட்பாளர்கள் தங்களுக்கான ஆதரவாளர்கள், பரிந்துரையாளர்களை அழைத்து வரக்கூடாது. இந்நிலையில் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட கனிமொழி விருப்ப மனு அளித்திருந்தார். அவரை தலைவர் மு.க.ஸ்டாலின் நேர்காணல் செய்தது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் காலியாகவுள்ள 21 சட்டசபை தொகுதிகளுக்கான நேர்காணல் நேற்று நடந்து முடிந்தது. இதையடுத்து மக்களவை தொகுதிகளுக்கான நேர்காணல் இன்று காலை தொடங்கி, மாலை முடிவடைந்துவிடும்.

அடுத்த செய்தி