ஆப்நகரம்

நெல் ஜெயராமனை சந்தித்து உடல்நலம் பெற ஆறுதல் தெரிவித்த மு.க. ஸ்டாலின்

நெல் ஜெயராமனை நேரில் சந்தித்து உடல்நலம் விசாரித்தார் மு.க. ஸ்டாலின்

Samayam Tamil 20 Nov 2018, 2:34 am
தேனாம்பேட்டை அப்பல்லோ மருத்துவமனையில் புற்றுநோயிக்காக சிகிச்சை பெற்று வரும் நெல் ஜெயராமனை திமுக தலைவர் ஸ்டாலின் இன்று விசாரித்து உடல்நலம் குறித்து கேட்டறிந்தார்.
Samayam Tamil mk-stalin


169 பாரம்பரிய நெல் வகைகளை மீட்டது உள்ளிட்ட பல சாதனைகளைப் புரிந்துள்ள நெல் ஜெயராமன், புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.

சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நெல் ஜெயராமனை பல்வேறு அரசியல் கட்சியின் தலைவர்களும், முக்கிய பிரமுகர்களும் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.



அந்த வகையில், இன்று காலை 11 மணியளவில் நெல் ஜெயராமன் சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனைக்கு வந்த திமுக தலைவர் ஸ்டாலின், அவரை சந்தித்து ஆறுதல் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “169 பாரம்பரிய நெல் வகைகளை மீட்ட சாதனை மனிதர் ‘நெல் ஜெயராமன்’ அவர்கள் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருப்பதை அறிந்து, நேரில் சந்தித்து நலம் விசாரித்தேன்! நம்மாழ்வார் அவர்களால் ‘நெல் ஜெயராமன்’ என்று போற்றப்பட்டவர். தன்னலமின்றி விவசாயம் காத்த இவர் மீண்டு(ம்) வர வேண்டும்!” என அவர் பதிவிட்டுள்ளார்.

அடுத்த செய்தி