ஆப்நகரம்

திருநங்கைகளுக்கு ரூ.2,000 நிவாரணம் வழங்க உத்தரவு..!

தமிழ்நாட்டில் திருநங்கைகளுக்கு கொரோனா நிவாரண நிதியாக ரூ.2,000 வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

Samayam Tamil 3 Jun 2021, 7:50 pm
தமிழ்நாட்டில் கொரோனா நிவாரண நிதியாக அரிசி குடும்ப அட்டை தாரர்களுக்கு 4000 ஆயிரம் ரூபாயை அரசு அறிவித்தது. அதன்படி, முதல் தவணையாக ரூபாய் 2 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது. இரண்டாவது தவணை தொகை வழங்கும் திட்டத்தை இன்று முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
Samayam Tamil கோப்புப்படம்


அத்துடன், 14 வகையான மளிகை பொருட்கள் கொண்ட தொகுப்பை வழங்கும் திட்டமும் தொடங்கி வைக்கப்பட்டது. இது ஜூன் மாதம் முதல் வழங்கப்படவுள்ளது. இந்நிலையில், தமிழ்நாட்டில் திருநங்கைகளுக்கு கொரோனா நிவாரண நிதியாக ரூ.2,000 வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

அதன்படி, தமிழகத்தில் அரிசி குடும்ப அட்டை வைத்துள்ள 2,956 திருநங்கைகளுக்கு நிவாரண நிதியாக ரூ.2,000 வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் தற்போது 11,449 மூன்றாம் பாலினத்தவர்கள் மூன்றாம் பாலின நல வாரியத்தில் பதிவு செய்துள்ளனர்.

பிளஸ் 2 தேர்வு: அரசு எடுக்கப் போகும் முடிவு - தயாராக இருங்கள் மாணவர்களே!

இதில், குடும்ப அட்டை வைத்துள்ள 2956 மூன்றாம் பாலினத்தவர்களுக்கு 2000 ரூபாய் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள குடும்ப அட்டை வைத்திராத 849,3 மூன்றாம் பாலினத்தவர்களுக்கு ரூபாய் 2 ஆயிரம் வழங்கும் அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இதற்காக ரூபாய் 16986000 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது தமிழக அரசு.

அடுத்த செய்தி