ஆப்நகரம்

வார்த்தை மாறியதால் காமெடியான செயல் தலைவர்- ஸ்டாலின் பழமொழிகள் பிரபலமானது ஏன்?

வார்த்தை மாற்றத்தால் ஸ்டாலின் பழமொழிகள் என்ற ஹேஸ் டேக் டுவிட்டரில் பிரபலமடைந்துள்ளது.

Samayam Tamil 23 Mar 2018, 5:47 pm
சென்னை : வார்த்தை மாற்றத்தால் ஸ்டாலின் பழமொழிகள் என்ற ஹேஸ் டேக் டுவிட்டரில் பிரபலமடைந்துள்ளது.
Samayam Tamil mk stalin


பழமொழி மூலம் ஒரு தகவல், இதை செய்தால் இப்படி ஆகும் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை அடக்கி பழ காலங்களாக கூறப்பட்டு வரும் மொழி. உவமை மூலம் மக்களுக்கு புரியும் வண்ணம் சொல்லப்படுவது தான் இதன் சிறப்பு.

அப்படிப்பட்ட பழமொழியில் ஒன்றை திமுக செயல் தலைவர் முக ஸ்டாலின் வார்த்தையை மாற்றி கூறியதால் தற்போது சமூக வலைத்தளங்களில் டிரெண்டிங் ஆகியுள்ளது.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ ராசா எழுதிய, ‘2ஜி அவிழும் உண்மைகள்’ என்ற நூல் வெளியீட்டு விழா நடைப்பெற்றது. இதில் திமுக., பொதுச் செயலாளர் அன்பழகன், செயல் தலைவர் ஸ்டாலின், இந்து ராம், கி.வீரமணி, வைரமுத்து, கனிமொழி, சுப. வீரபாண்டியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். விழாவில் ராஜா கைய வச்சா என்ற பாடல் வரியைக் கூறி மு.க.ஸ்டாலின் தனது பேச்சைத் தொடங்கினார்.



ஸ்டாலின் பேசும் போது, “யானை வரும் முன்னே, மணி ஓசை வரும் பின்னே, அது போல இந்த புத்தகம் வெளியாவதற்கு முன்னரே அவருக்கு விடுதலை கிடைத்து விட்டது.” என பேசினார்.
பழமொழியை தவறாக மாற்றி கூறியதால் ஸ்டாலினின் பேச்சு தற்போது நகைப்புக்கு உள்ளாகியுள்ளது.
ஸ்டாலினின் பழமொழியை கிண்டலடித்து தற்போது வேகமாக பரவிவரும் சில மீம்ஸ், டுவீட்டுகளை இங்கு பார்ப்போம்.







அடுத்த செய்தி