ஆப்நகரம்

அப்பாதுரை ஸ்டாலின் ஆனது எப்படி?

திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தனக்கு ஸ்டாலின் என்ற பெயர் வைக்கப்பட்டதன் பின்னணியை நிகழ்ச்சி ஒன்றில் பகிர்ந்துகொண்டார்.

Samayam Tamil 28 Jan 2018, 6:35 pm
திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தனக்கு ஸ்டாலின் என்ற பெயர் வைக்கப்பட்டதன் பின்னணியை நிகழ்ச்சி ஒன்றில் பகிர்ந்துகொண்டார்.
Samayam Tamil mk stalin recalls how appadurai became stalin
அப்பாதுரை ஸ்டாலின் ஆனது எப்படி?


திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கட்சி நிர்வாகியின் திருமண விழாவில் பங்கேற்றுப் பேசினார். அப்போது, மணமக்கள் தங்களுக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கு தமிழிலேயே பெயர் வைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

பின், ஸ்டாலின் என்ற தனது பெயர் தமிழ்ப் பெயர் அல்ல. காரணப்பெயர் என்று கூறினார். தொடர்ந்து தனக்கு பெயர் வைக்கப்பட்டது எப்படி என்பதையும் குறிப்பிட்டார்.

“என் தந்தை கருணாநிதி முதலில் எனக்கு அப்பாதுரை என்று பெயர் சூட்டவே விரும்பினார். தந்தை பெரியாரை ஐயா என்றும் அழைப்பார்கள். அறிஞர் அண்ணாவுக்கு துரை என்ற பெயரும் உண்டு. இந்த இருவர் மீதும் பற்று கொண்டிருந்த எனது தந்தை எனக்கு அப்பாதுரை என்று பெயர் வைக்க முடிவு செய்திருந்தார். அப்போது, ரஷ்யாவில் ஸ்டாலின் இறந்ததற்காக நடைபெற்ற இரங்கல் கூட்டத்தில் என் தந்தை பேசினார். அவர் பேசிக்கொண்டிருக்கும் போது ஒருவர் வந்து ஒரு சீட்டைக் கொடுத்திருக்கிறார். அந்தச் சீட்டில் உங்களுக்கு ஆண் குழந்தைப் பிறந்திருக்கிறது என்று கூறப்பட்டிருந்தது. உடனே, அவர் தனக்கு மகன் பிறந்திருக்கிறான் என்றும் அவனுக்கு ஸ்டாலின் என்று பெயர் சூட்டுவதாகவும் மேடையிலேயே அறிவித்தார்.” என்று மு.க.ஸ்டாலின் கூறினார்.

அடுத்த செய்தி