ஆப்நகரம்

சுதந்திரமான வாக்கெடுப்பு: ஆளுநருக்கு ஸ்டாலின் கோரிக்கை

சுதந்திரமான சட்டப்பேரவை வாக்கெடுப்பை உறுதி செய்து ஜனநாயக மாண்புகளை காக்க வேண்டும் என ஆளுநருக்கு எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.

TNN 9 Feb 2017, 11:19 am
சென்னை: சுதந்திரமான சட்டப்பேரவை வாக்கெடுப்பை உறுதி செய்து ஜனநாயக மாண்புகளை காக்க வேண்டும் என ஆளுநருக்கு எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.
Samayam Tamil mk stalin requests governor to ensure freedom of majority voting
சுதந்திரமான வாக்கெடுப்பு: ஆளுநருக்கு ஸ்டாலின் கோரிக்கை


அதிமுக தலைமைக்கு எதிராக அதிருப்தி தெரிவித்துள்ள பன்னீர்செல்வம், கட்டாயத்தின் பேரில் ராஜினாமா செய்தேன். மக்கள், தொண்டர்கள் விருப்பப்பட்டால் ராஜினாமாவை திரும்பப் பெறுவேன் என்றும் கூறியிருந்தார். மேலும், சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிப்பேன் எனவும் அவர் தெரிவித்திருந்தார். ஆனால், எங்களுக்கு தான் பெரும்பான்மை எம்எல்ஏ-க்களின் ஆதரவு உள்ளது என சசிகலா தரப்பினரும் தெரிவித்து வருகின்றனர்.

அதேசமயம், யாருக்கு எத்தனை எம்எல்ஏ-க்கள் ஆதரவு என்பது இரூ தரப்பினராலும், பரம ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது. இதனால், ஆதரவு எம்எல்ஏ-க்களுடன் சசிகலா ஆட்சி அமைப்பாரா அல்லது பன்னீர்செல்வத்திற்கு பெருமான்மையை நிரூபிக்க வாய்ப்பு கொடுக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. இதனிடையே, தமிழக் பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் இன்று பிற்பகலில் சென்னை வரவுள்ளார். இதனால் உச்ச கட்ட பரபரப்பு தமிழகத்தில் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், சுதந்திரமான சட்டப்பேரவை வாக்கெடுப்பை உறுதி செய்து ஜனநாயக மாண்புகளை காக்க வேண்டும் என ஆளுநருக்கு எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும், அதிமுக எம்எல்ஏக்கள் பிணைக் கைதிகள் போல் சிறை வைக்கப்பட்டுள்ளது மக்களாட்சி மாண்பைச் சிதைக்கிறது என்றும், பிணைக் கைதிகளாக உள்ள எம்எல்ஏ-க்களின் ஆதரவு யாருக்கு என்பது வெளிப்படையாகத் தெரியவில்லை என்றும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
MK Stalin requests Governor to ensure freedom of Majority voting

அடுத்த செய்தி