ஆப்நகரம்

இப்போது தேவை சொல் அல்ல; செயல்: முதல்வரை சாடிய மு.க.ஸ்டாலின்

வாய்ச்சவடால் செய்வதை விடுத்துச் செயல்பாட்டில் அக்கறை செலுத்த வேண்டும் என முதல்வர் பழனிசாமியை மு.க.ஸ்டாலின் சாடியுள்ளார்

Samayam Tamil 7 Jun 2020, 8:50 pm
தமிழக அரசின் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக மக்களுக்கு உரையாற்றினார். அப்போது, தமிழகத்தில் கொரானா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. கொரானா ஆபத்து பெருமளவு குறைக்கப்பட்டுள்ளது. நோய்த்தொற்றில் இருந்து குணமடைவோர் எண்ணிக்கை தமிழகத்தில்தான் அதிகம். கொரோனாவுக்கு எதிரான போரில் நாம் வெற்றி பெறுவோம் என்பதில் எந்த ஐயமும் இல்லை என்றார்.
Samayam Tamil மு.க.ஸ்டாலின்
மு.க.ஸ்டாலின்


இந்த நிலையில், இயற்கையை வென்றோம்; சவால்களைச் சந்தித்தோம்; இறப்பு விகிதம் உலகத்திலேயே குறைவு என்று வாய்ச்சவடால் செய்வதை விடுத்துச் செயல்பாட்டில் அக்கறை செலுத்துங்கள் என முதல்வர் பழனிசாமியை மு.க.ஸ்டாலின் சாடியுள்ளார்.

நாட்டிலேயே கொரோனா வைரஸ் பரவலால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள மாநிலங்களில் ஒன்றாக தமிழகம் மாறி வரும் நிலையில், முதலமைச்சர் ஆற்றிய உரையில் நோய்ப் பரவலைத் தடுப்பதற்கோ, வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களைக் காப்பதற்கோ உரிய உறுதியான திட்டங்கள் குறித்த அறிவிப்புகள் எதுவுமே இடம்பெறவில்லை என மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.

கொரோனா பாதிக்கப்பட்ட 86 சதவீதம் பேருக்கு அறிகுறி இல்லை: முதல்வர் அதிர்ச்சி தகவல்!

நோய்த் தொற்றின் தலைநகராகச் சென்னை மாறிக்கொண்டிருப்பதைக் கட்டுப்படுத்த இனியாவது செயல்படுங்கள். சென்னையில் அரசு மருத்துவமனைகள் படுக்கைகள் போதாமல் திணறுகின்றன. திருமண மண்டபங்களை, கல்விக் கூடங்களை மருத்துவமனைகளாக மாற்றுவோம் என அரசு அறிவித்தது என்ன ஆயிற்று எனவும் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

வெறுமனே, ஏதோ புள்ளிவிவரங்களைச் சொல்லி தன்னைத்தானே ஏமாற்றிக் கொள்ளாமல் தமிழ்நாட்டு மக்களைக் காக்க முதலமைச்சர் முன்வர வேண்டும் என வலியுறுத்தியுள்ள ஸ்டாலின், சென்னையின் ஐந்து மண்டலத்தை மிகுந்த கட்டுப்பாட்டுப் பகுதியாக மாற்றி - அப்பகுதி மக்களுக்குத் தேவையான பொருட்களை அரசே வழங்கி - ஓர் அரண் போல் தடுப்பு நடவடிக்கை எடுத்தால் தான் மக்களைக் காக்க முடியும் எனவும் யோசனை தெரிவித்துள்ளார்.


தி.மு.க. தலைமையிலான அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் நிறைவேற்றிய தீர்மானத்தின் படி அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் நிவாரணமாக மாதம் ரூ.5000 வழங்க வேண்டும். இப்போது தேவை சொல் அல்ல; செயல்! எனவும் ஸ்டாலின் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அடுத்த செய்தி