ஆப்நகரம்

சட்டசபையில் ஓபிஎஸ் அணிக்கு ஆதரவாக திமுகவினர் கோஷம்-கடும் அமளி

ஓ.பி.எஸ் தரப்பு கொறடா செம்மலைக்கு ஆதரவு தெரிவித்து, ரகசிய வாக்கெடுப்பு நடத்தக் கோரி மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார்.

TNN 18 Feb 2017, 11:41 am
சென்னை: ஓ.பி.எஸ் தரப்பு கொறடா செம்மலைக்கு ஆதரவு தெரிவித்து, ரகசிய வாக்கெடுப்பு நடத்தக் கோரி மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார்.
Samayam Tamil mk stalin supports ops team semmalai to speak in floor test
சட்டசபையில் ஓபிஎஸ் அணிக்கு ஆதரவாக திமுகவினர் கோஷம்-கடும் அமளி


தமிழ்நாடு சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு மீதான தீர்மானத்தை முதலமைச்சர் பழனிச்சாமி முன்மொழிந்தார். ஆனால் சட்டப்பேரவையில் ரகசிய வாக்கெடுப்பு கோரி ஓ.பி.எஸ் தரப்பு, திமுக, காங்கிரஸ் ஆகியோர் கோஷங்கள் எழுப்பினர். இதற்கிடையில் ஓ.பி.எஸ் தரப்பினருக்கு ஆதரவாக, திமுக எம்.எல்.ஏக்களும் கோஷங்கள் எழுப்பினர். இதையடுத்து எம்.எல்.ஏக்கள் அமைதி காக்குமாறு சபாநாயகர் தனபால் வலியுறுத்தி வருகிறார்.

இதற்கிடையில் பேசிய மு.க.ஸ்டாலின், சிறைக்கைதிகள் போல் எம்.எல்.ஏக்கள் அழைத்து வரப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டினார். பின்னர் ஸ்டாலினுக்கு எதிராக எடப்பாடி பழனிச்சாமி ஆதரவு எம்எல்ஏக்கள் முழக்கத்தில் ஈடுபட்டுள்ளனர். வேறொரு நாளில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தலாம் என்ற ஸ்டாலின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. எம்.எல்.ஏக்களுக்கு போதிய பாதுகாப்பு இல்லை என்று எதிர்க்கட்சியினர் புகாரை தொடர்ந்து, உரிய பாதுகாப்பு வழங்கப்படும் என்று கூறினார்.

MK Stalin supports OPS team Semmalai to speak in floor test.

அடுத்த செய்தி