ஆப்நகரம்

குட்டிக்கரணம் அடித்தாலும் படுத்து உருண்டாலும் டெபாசிட் கிடைக்காது: ஸ்டாலின்

அதிமுக குட்டிக்கரணம் அடித்தாலும் படுத்து உருண்டாலும் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் டெபாசிட் வாங்கப்போவதில்லை என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

TNN 11 Dec 2017, 2:50 pm
சென்னை: அதிமுக குட்டிக்கரணம் அடித்தாலும் படுத்து உருண்டாலும் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் டெபாசிட் வாங்கப்போவதில்லை என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
Samayam Tamil mk stalin takes a dig at admk over rk nagar by election campaign
குட்டிக்கரணம் அடித்தாலும் படுத்து உருண்டாலும் டெபாசிட் கிடைக்காது: ஸ்டாலின்


ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வரும் டிசம்பர் 21ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், அதிமுக, அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகளும் டிடிவி கோஷ்டியும் பிரச்சாரம் செய்வதற்காக ஆர்.கே.நகரில் சுற்றிவருகின்றன.

இந்நிலையில், இன்று செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், ஓபிஎஸ், ஈபிஎஸ் உட்பட அதிமுகவினர் ஆர்.கே.நகரில் போய் குட்டிக்கரணம் அடித்தாலும் படுத்து உருண்டாலும் டெபாசிட் கூட அரிது என்று உறுதிபடக் கூறினார்.

மேலும், காணாமல் போன மீனவர்களின் எண்ணிக்கை என்று அமைச்சர் ஒரு கணக்கு சொல்கிறார். தலைமைச் செயலாளர் ஒரு கணக்கு சொல்கிறார். முதல்வர் ஒரு கணக்கு சொல்கிறார். தற்போது மாவட்ட ஆட்சியர் ஒன்று கணக்கைச் சொல்கிறார். ஆகவே, கணக்கெடுப்பையே ஒழுங்காக எடுக்க முடியாத நிலையில் மத்திய மாநில அரசுகள் உள்ளன. இது தொடர்பாக ஆளுநரைச் சந்தித்துப் பேச நேரம் கேட்டிருக்கிறோம் என்றும் அவர் கூறினார்.

திருமாவின் தலைக்கு ஒரு கோடி என்று விலை பேசியதையும் கண்டித்த மு.க.ஸ்டாலின், இந்த முறை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை தேர்தல் ஆணையம் முறையாக நடத்த எல்லா முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

அடுத்த செய்தி