ஆப்நகரம்

ஜெ., குறித்த மருத்துவ அறிக்கை: ஸ்டாலின் வலியுறுத்தல்

முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை தொடர்பான மருத்துவ அறிக்கையை தமிழக அரசு வெளியிட வேண்டும் என எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

TNN 10 Oct 2016, 12:00 pm
சென்னை: முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை தொடர்பான மருத்துவ அறிக்கையை தமிழக அரசு வெளியிட வேண்டும் என எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
Samayam Tamil mk stalin urges tn govt to release medical statement about jayas health condition
ஜெ., குறித்த மருத்துவ அறிக்கை: ஸ்டாலின் வலியுறுத்தல்


திருச்சியில் தேமுதிக நிர்வாகிகள்,திமுகவில் இணையும் விழாவில் கலந்து கொண்டு சென்னை திரும்பிய எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், மருத்துவமனையில் உள்ள முதலமைச்சர் ஜெயலலிதாவை மருத்துவர்கள் தவிர வேறு யாரு நேரில் பார்க்க முடியாத சூழ்நிலை இருக்கிறது.

இந்த நிலையில் வெறும் அப்பல்லோ மருத்துவமனை வெளியிடும் மருத்துவ அறிக்கையை மட்டும் போதாது. முதல்வரில் உடல்நிலையை மக்கள் அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில், தலைமை செயலாளரோ, சுகாதாரத்துறை அமைச்சரோ அல்லது சுகாதாரத்துறை செயலாளரோ, அரசின் சார்பில் அதிகாரப்பூர்வமாக வெளியிட வேண்டும் என்று வலியுறுத்தினார்.

மேலும், காவிரி நதிநீர் விவகாரத்தில் மாநில அரசு அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி விவாதிக்காதது கண்டிக்கத்தக்கது.அண்டை மாநிலங்களான கேரளா,ஆந்திரா,கர்நாடகம் போல அனைத்து கட்சி பிரதிநிதிகளையும் கூட்டி, காவிரி விவகாரத்தில் விவசாயிகளுக்கும் பயனளிக்கும் வகையிலான முடிவை பெற்று தருவது குறித்து ஆலோசிக்க வேண்டும் என்றும் ஸ்டாலின் கேட்டுக் கொண்டார்.

MK Stalin urges TN govt to release medical statement about Jaya's health condition #JayaHealth #ApolloHospitals #Jayalalitha #DACase #Jayaverdict #JayalalithaHealthCondition #JayalalithaBrainDead #Intensivist #SheelaBalakrishnana

அடுத்த செய்தி