ஆப்நகரம்

தமிழகம் கேரளம் போல ஆகணும்: ஸ்டாலின் விருப்பம்

கேரளாவைப் போல தமிழகத்திலும் அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்க வேண்டும் என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

TNN 8 Oct 2017, 1:37 pm
கேரளாவைப் போல தமிழகத்திலும் அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்க வேண்டும் என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
Samayam Tamil mk stalin wants tamilnadu to follow kerala
தமிழகம் கேரளம் போல ஆகணும்: ஸ்டாலின் விருப்பம்


கேரளாவில் முதல்வர் பினராயி விஜயன் அனைத்து சாதியினரையும் முதல்வராக்கி உத்தரவிட்டுள்ளார். காலியாக உள்ள 62 அர்ச்சகர் பணி இடங்களுக்கு திருவிதாங்கூர் தேவசம் போர்டு அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக நியமித்துள்ளது. இதில் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் 6 பேர் இடம்பெற்றுள்ளனர்.

இதற்கு பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த அரசியல் தலைவர்களும் பிரபலங்களும் வாழ்த்தும் பாராட்டும் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், இதுகுறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்ட திமுக செயல் தலைவரும் தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின், கேரளாவில் அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்கும் திட்டம் செயல்பாட்டுக்கு வருவது மகிழ்ச்சி அளிக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

பிற கோவில்களிலும் கேரள அரசு இதே நடைமுறையை பின்பற்ற இருப்பதற்கு வரவேற்பும், பாராட்டும் கூறிய ஸ்டாலின், தமிழகத்தில் இதற்காக தனியாக சட்டமே நிறைவேற்றப்பட்ட நிலையிலும், அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்க மனமில்லாத ஒரு அரசு இப்போதும் ஆட்சி செய்து வருகிறது. ஆகம பயிற்சி பெற்ற அனைத்து சமுதாயத்தினரும் அர்ச்சகராக நியமிக்கப்படுவதே சமூகநீதியாகும். கேரள அரசிடமிருந்து தமிழக அரசு முற்போக்குப் பாடம் கற்று, உடனடியாக அனைத்து சாதியினரையும் கோயில்களில் அர்ச்சகர்களாக நியமிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

அடுத்த செய்தி