ஆப்நகரம்

காலையில் திண்ணைப் பிரச்சாரம்... மாலையில் திரையரங்கம்... அசதி தீர அசுரன் பார்க்கும் மு.க.ஸ்டாலின்

16 ஆம் தேதி நாங்குநேரியில் பிரச்சாரத்தில் இருந்த மு.க.ஸ்டாலின், இன்று (16.10.19) இரவு தூத்துக்குடியில் உள்ள பாலகிருஷ்ணா திரையரங்கில் அசுரன் திரைப்படம் பார்த்துள்ளார். ​​

Samayam Tamil 16 Oct 2019, 11:56 pm
நாங்குநேரி தொகுதியில் சட்டப்ப்பேரவை இடைத்தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்துள்ளது. ஒரு பக்கம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி , மறுபக்கம் எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் என இரு கட்சிகளும் தங்கள் பலத்தை நிரூபிக்க தத்தம் கட்சித் தொண்டர்கள் மூலம் தேர்தல் வேலைகளை கண்ணும் கருத்துமாக கவனித்து வருகின்றனர்.
Samayam Tamil mk stalin watching asuran movie in theatre
காலையில் திண்ணைப் பிரச்சாரம்... மாலையில் திரையரங்கம்... அசதி தீர அசுரன் பார்க்கும் மு.க.ஸ்டாலின்


இந்த வேலைகளுக்கிடையில் தனது ஆசுவாசத்துக்கு அருமையான வழியை கண்டுபிடித்திருக்கிறார் மு.க.ஸ்டாலின். பகல் முழுதும் தெருவெங்கும் திண்ணையெங்கும் தேடித்தேடி வாக்கு சேகரித்த பின்பு மாலை நேரத்தில் ஓய்வு தீர ஒரு திரையரங்கில் படம் பார்ப்பது தான் அது.

16 ஆம் தேதி நாங்குநேரியில் பிரச்சாரத்தில் இருந்த மு.க.ஸ்டாலின், இன்று (16.10.19) இரவு தூத்துக்குடியில் உள்ள பாலகிருஷ்ணா திரையரங்கில் அசுரன் திரைப்படம் பார்த்துள்ளார்.
ஒரு அரசியல் தலைவர் திரைப்படம் பார்ப்பது ஒன்றும் பெரிய செய்தி அல்ல. ஆனால், தேர்தல் பணிகளுக்கிடையில் தீவிர பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டிய கட்டாயம் இருக்கும் நிலையில் மு.க.ஸ்டாலின் திரைப்படம் பார்ப்பது , எந்த நம்பிக்கையில் அவர் இப்படி அசமந்தமாக இருக்கிறார் என்ற கேள்வியை எழுப்புகிறது.

இதேபோல கடந்த ஜூலை மாதம் ராகுல் காந்தி டெல்லியில் உள்ள பி.விஆர் சாணக்யா திரையரங்கில் ‘ஆர்ட்டிக்கிள் 15’ படம் பார்த்த காணொளி சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது. ஆனால், அப்போது ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சியில் தலைவர் பொறுப்பிலிருந்து விலகி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி